திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ஒரு டஜனுக்கு மேல் 90ஸ் ஹீரோயின்களை பாலிவுட்டில் நடிக்க வைத்த ஒரே நடிகர்.. உருகி உருகி காதலித்த ஸ்ரீதேவி

Mithun Chakraborty who cast 90s heroines in Hindi films: குக்கூ திரைப்படத்தில்  இளையராஜாவின் பாடலை பாடும் முன், “ஹிந்தி பாட்டு கேட்டுக் கொண்டிருந்த தமிழ் ரசிகர்களை தமிழ் பாட்டு கேட்க வைத்தவர் இசைஞானி” என்ற வசனம் இடம் பெற்று பலரின் கைதட்டல்களை பெற்றது இது முற்றிலும் உண்மையே. 80ஸ் காலகட்டத்தில் தமிழ் ரசிகர்கள் பெரும்பாலும் ஹிந்தி பாடல்களுக்கும், பாலிவுட் நடிகர்கள் மீதும் தான் அடிமைப்பட்டு இருந்தனர். ஆனால் பாலிவுட் நடிகர் ஒருவர் தமிழ் சினிமா ஹீரோயின் தான் வேணும் என்று அடம்பிடித்த காலமும் வரத்தான் செய்தது.

பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி பெங்காலி படத்தில் நடித்ததன் மூலம் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்று முதல் படத்திலேயே தனது முத்திரையை பதிவு செய்தார். பின் படிப்படியாக ஹிந்தி படங்களில் நடித்து முன்னணி நடிகராக, ரசிகர்களிடையே பிரபலமானார்.

இந்தியாவின் பல மொழிகளிலும் நடித்திருந்த மிதுன் சக்கரவர்த்தி அவர்கள். தமிழில் மணிரத்தினத்தின் இயக்கத்தில் வெளியான குரு திரைப்படத்தில் அபிஷேக் பச்சனுடன் பழகும் பத்திரிக்கை ஆசிரியர் நானாஜி கதாபாத்திரத்திலும், யாகாவாராயினும் நாகாக்க என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also read: மல்டிஸ்டார் ட்ரிக்ஸ் செமையா யூஸ் பண்ணும் மணிரத்தினம்.. ரங்கராயன் சக்திவேல் கூட இவ்வளவு நட்சத்திரங்களா?

பிறப்பால் வங்காளரான மிதுன் சக்கரவர்த்தி, ஒருமுறை ஊட்டி வந்திருந்த சமயம் மலைகளின் அரசியிடம் மயங்கி போய் ஊட்டியில் ஹோட்டல் ஒன்றும்  வாங்கியுள்ளாராம். தமிழ்நாட்டு மீது பிரியம் கொண்ட இந்த நடிகருக்கு தமிழில் நடித்த பெரும்பாலான நடிகைகளை பாலிவுட்டில் அறிமுகமும் செய்து வைத்த பெருமையும் உண்டு.

உதாரணமாக 90 ஸ் ஹீரோயின்களான கௌதமி, பானுப்ரியா, பானுப்ரியாவின் சகோதரி நிஷாந்தி, சங்கவி, ரம்யா கிருஷ்ணன், சுவாதி, ரம்பா, மந்திரா,சிம்ரன்,பாட்ஷா படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்த செண்பகா, சுவர்ணா மேத்யூ, ஜெயபிரபா, விஜயசாந்தி  என பல நடிகைகளின் திறமைகளை கண்டு அவர்களுக்கு பாலிவுட்டில் நடிக்க வாய்ப்பு வாங்கி கொடுத்தவர் மிதுன் சக்கரவர்த்தி ஆவார்.

திரைத்துறையில் இவரது சேவையை பாராட்டி மத்திய அரசு கடந்த மாதம்  இவருக்கு பத்மபூஷன் விருது வழங்கி சிறப்பித்தது. மூன்று தேசிய விருதுகளை தனதாக்கி கொண்ட மிதுன் சக்கரவர்த்தியும் மறைந்த நடிகை ஸ்ரீதேவி அவர்களும் தொடர்பில் இருந்ததாகவும் ஏற்கனவே மிதுன் சக்கரவர்த்தி திருமணம் செய்து இருந்ததால் இருவரும் பிரிந்தனர் என  சர்ச்சைகள் வெடித்தன.

Also read: எனக்கும் ஸ்ரீதேவிக்கும் இடையே இருந்த அந்த உறவு.. நடிகையின் மரணத்திற்குப் பிறகு மனம் திறந்த கமல்

Trending News