அஜித்தின் அடுத்த பட ஹீரோயின் இவர்தான்.. 31 வயது நடிகையுடன் ஜோடி போடும் ஏகே

Ajith : அஜித்தின் விடாமுயற்சி படம் எப்போது ரிலீஸாகும் என்று தேவுடு காத்த கதையாக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஏனென்றால் துணிவு படம் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேல் ஆகிறது. ஆனாலும் அவரது அடுத்த படம் வெளியாகாததால் ரசிகர்கள் அதிருப்தியில் இருந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த வருடம் எப்படியும் விடாமுயற்சி படம் ரிலீஸ் ஆகிவிடும் என்று நம்பப்படுகிறது. இதைத்தொடர்ந்து அஜித்தின் அடுத்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் எடுக்க இருக்கிறார். இந்த படத்திற்கான வேலை படு பயங்கரமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தில் நடிக்க நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது.

பாலிவுட் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் அதிக படங்களில் நடித்தவர் தான் மிருணாள் தாகூர். இவர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான சீதா ராமம் படத்தில் நடித்திருந்தார். இதை அடுத்து தமன்னா நடிப்பில் வெளியான லஸ்ட் ஸ்டோரீஸ் வெப்தொடரிலும் நடித்திருந்தார்.

இப்போது மிருணாளை தான் அஜித்துடன் நடிக்க வைக்க படக்குழு பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. ஆனால் அவர் தற்போது வரை எந்த முடிவு சொல்லவில்லையாம். ஆகையால் மிருணாள் தாகூர் இந்த படத்தில் நடிக்கவில்லை என்று சொன்னால் அதன் பிறகு திஷா பதானி இடம் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார்களாம்.

பாலிவுட்டில் பிரபல நடிகை திஷா பதானி தமிழில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இப்போது அஜித்துடன் நடிக்கும் வாய்ப்பும் திஷா பதானிக்கு இருக்கிறது. திஷா அல்லது மிருணாள் ஆகியோரில் ஒருவர் அஜித்துடன் ஜோடி போடுவது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. அதோடு இருவருக்குமே தற்போது 31 வயது என்பது குறிப்பிடத்தக்கது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →