திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

இந்த 5 பாடல்கள் லதா ரஜினிகாந்த் பாடியதா!. பின்னணிப் பாடகியாக கலக்கிய சூப்பர் ஸ்டாரின் மனைவி

Latha Rajinikanth as blayback singer: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள்கள் ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா இருவரும் திரை துறையில் கால் பதித்து தங்களுக்கான அடையாளத்தை உருவாக்கி இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு முன்பே ரஜினியின் மனைவி லதா பின்னணி பாடகியாக தமிழ் சினிமாவிற்குள் நுழைந்து விட்டார். லதாவுக்கு நன்றாக பாட்டு பாட தெரியும் என்பதை அறிந்து கொண்ட இளையராஜா அவரை கேட்டுக் கொண்டதால், நட்பிற்காக பின்னணி பாடகி ஆனார் லதா.

லதா ரஜினிகாந்த் பாடிய பாடல்கள்

டிக் டிக் டிக்: இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் கமலஹாசன், மாதவி மற்றும் ராதா ஆகியோர் இணைந்து நடித்த திகில் திரைப்படம் தான் டிக் டிக் டிக். இந்த படத்தில் இடம்பெற்ற இது ஒரு நிலாக்காலம், நேற்று இந்த நேரம் என்ற இரண்டு பாடல்களும் இன்று வரை ரசிகர்களின் ஃபேவரைட் லிஸ்டில் இருக்கிறது. இதில் நேற்று இந்த நேரம், ஆற்றங்கரை ஓரம் என்ற பாடலை பாடியவர் லதா ரஜினிகாந்த் தான்.

வள்ளி: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரைக்கதை எழுதி, தயாரித்து, கேமியோ ரோலில் நடித்த படம் தான் வள்ளி. இந்த படத்தில் லதா ரஜினிகாந்த் பங்களிப்பை கொடுத்திருந்தார். இந்த படத்தில் வரும் குக்கூ மற்றும் டிங்டாங் போன்ற பாடல்களை லதா ரஜினிகாந்த் தான் பாடியிருந்தார். வள்ளி படம் வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதோடு இந்த படத்தில் வரும் என்னுள்ளே என்னுள்ளே பாடல் இன்று வரை கொண்டாடப்பட்டு வருகிறது.

Also Read:சினிமாவுக்கு முன் வேறு தொழில் பார்த்த 5 பிரபலங்கள்.. சூப்பர் ஸ்டார் முதல் லேடி சூப்பர் ஸ்டார் வரை

கோச்சடையான்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு ரிலீசான படம் கோச்சடையான். இந்த படம் அனிமேஷன் திரைப்படம் ஆக வெளியானது. கோச்சடையான் படத்தில் ஏ ஆர் ரகுமான் இசையில், லதா ரஜினிகாந்த் காதல் கனவா உன்னை கைவிடமாட்டேன் என்ற பாடலை பாடியிருந்தார். இளையராஜா கேட்டுக் கொண்டதற்காக பாடத் தொடங்கிய லதா முதன்முறையாக ஏ ஆர் ரகுமான் உடன் பணி புரிந்தார்.

ரஜினி 25: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 51வது பிறந்தநாளை லதா ரஜினிகாந்த் ரொம்பவும் கோலாகலமாக கொண்டாடினார். டிசம்பர் மாதம் முழுக்க அபிராமி மெகா மாலில் மிகப்பெரிய கண்காட்சி மற்றும் ரஜினியின் படங்கள் திரையிடப்பட்டன. டிசம்பர் 23ஆம் தேதி 25 வருட ரஜினியின் சினிமா என்ற பெயரில் மிகப்பெரிய விழா நடத்தப்பட்டது. இதில் திரையுலகின் ஒட்டுமொத்த நட்சத்திரங்களும் கலந்து கொண்டார்கள். லதா ரஜினிகாந்த் இந்த நிகழ்ச்சியில் 5 ஆல்பம் பாடல்களை பாடி வெளியிட்டிருந்தார்.

Also Read:நேத்து வந்த பையன் கிட்ட தோத்துப்போன ரஜினி.. வாழ்க்கை கொடுத்த அப்பாவை வச்சு செஞ்ச மகள்

Trending News