சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

அர்ஜுன் கல்லாவை நிரப்பியதற்கும், தடவியதற்கும் காரணமான படங்கள்.. நொந்து போன ஆக்சன் கிங்

Action King Arjun: சினிமாவில் பணம் போடுவது என்பது லாட்டரி டிக்கெட், குதிரை பந்தயம் போன்ற சூதாட்டம் தான். சில நேரத்தில் போட்ட பணத்தை விட பத்து மடங்குக்கு மேல் கை மேல் லாபம் பார்த்துவிடலாம். அதேபோன்று சில நேரங்களில் அடி விழுந்தால் எழுந்திருக்க முடியாத அளவுக்கு இருக்கும். அப்படி ஆக்சன் கிங் அர்ஜுன் தயாரிப்பாளராக கல்லா கட்டியதற்கும், படம் தயாரிப்பதையே நிறுத்தியதற்கும் காரணமான படங்களை பார்க்கலாம்.

சேவகன்: 1992 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன சேவகன் படத்தை அர்ஜுன் தயாரித்ததோடு, இயக்கியும் இருந்தார். இந்த படத்தில் அர்ஜூனுக்கு ஜோடியாக குஷ்பூ நடித்திருந்தார். நேர்மையான காவல் அதிகாரி, ஊழல் செய்யும் மந்திரி இருவருக்கும் இடையேயான வழக்கமான திரைக்கதை தான் இந்த படம். இருந்தாலும் இது பெரிய அளவில் அர்ஜுனுக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தது. இந்த படத்தின் மூலம் அர்ஜுன் தயாரிப்பாளராக வெற்றியும் கண்டார்.

Also Read:சமீபத்தில் விபரீத முடிவு எடுத்திருக்கும் 6 நடிகர்கள்.. சூழ்ச்சி கடலில் சிக்கி கொண்டிருக்கும் சூர்யா

பிரதாப்: சேவகன் படத்தை தொடர்ந்து 1993 ஆம் ஆண்டு அர்ஜுன் இயக்கி, தயாரித்த படம் தான் பிரதாப். ஆர்ஆர்ஆர் படத்தில் இசையமைத்ததன் மூலம் தேசிய விருது பெற்ற கீரவாணி தான் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டது. பிரதாப் படத்தின் மூலம் அர்ஜுன் தன்னை ஒரு சிறந்த தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் தமிழ் சினிமாவில் நிலைநிறுத்திக் கொண்டார்.

நஷ்டத்தை ஏற்படுத்திய படங்கள்:

ஜெய்ஹிந்த் 2: 1994 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆகி அர்ஜுனனுக்கு மிகப்பெரிய பெயர் வாங்கிக் கொடுத்த படம் ஜெய்ஹிந்த். இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை கடந்த 2014 ஆம் ஆண்டு அர்ஜுன் நடித்து, இயக்கி, தயாரித்திருந்தார். ஜெய்ஹிந்த் 2 படம் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் கன்னட மொழியிலும் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த படம் வந்த சுவடு தெரியாமல் ஊத்தி மூடப்பட்டது.

சொல்லிவிடவா: அர்ஜுன் தன்னுடைய மகளுக்காக கதை எழுதி, இயக்கிய படம் தான் சொல்லி விடவா. இந்த படத்தை அவருடைய சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் அவருடைய மனைவி நிவேதிதா அர்ஜூன் தயாரித்தார். ஒரே நேரத்தில் வெவ்வேறு நடிகர்கள் குழுவை வைத்து தமிழ் மற்றும் கன்னட மொழியில் படமாக்கப்பட்ட ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த படம் அர்ஜுனுக்கு பெரிய நஷ்டத்தை கொடுத்தது.

குறிப்பிட்ட காலகட்டத்தில் தயாரிப்பில் கொடிகட்டி பறந்த அர்ஜுனுக்கு தொடர்ந்து இரண்டு படங்கள் மிகப்பெரிய அளவில் பொருளாதார நஷ்டத்தை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் அர்ஜுனும் சினிமாவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஃபீல்ட் அவுட் ஆகி கொண்டிருந்தார். இனி சொந்த படத்தை போட்டு படம் எடுப்பது வேலைக்கு ஆகாது என தயாரிப்புக்கு ஒரு பெரிய கும்பிடு போட்டு விட்டார்.

Also Read:வியாபாரமாகாமல் கிடப்பில் போடப்பட்ட 4 தமிழ் படங்கள்.. சிக்கலில் மாட்டிக்கொண்ட ஐசரி கணேஷ்

Trending News