சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

எம்ஜிஆர், சிவாஜி இடையே முற்றிய சண்டை.. இரட்டை சவால்விட்ட நடிகர் திலகம்

Shivaji – Mgr : சினிமாவை பொருத்தவரையில் போட்டி நடிகர்கள் என்பது அந்த காலத்தில் தொடங்கி தற்போது வரை இருக்கிறது. ஆனால் சினிமாவில் போட்டி இருக்குமே தவிர அவர்களுக்குள் நல்ல நட்பு தான் இருந்திருக்கிறது. அதேபோல் தான் எம்ஜிஆர் மற்றும் சிவாஜி இருவரும் திரையில் போட்டி போட்டுக் கொண்டாலும் ஒருவருக்கொருவர் நட்பாக பழகி வந்தனர்.

இந்நிலையில் எம்ஜிஆரின் படங்களை எடுத்துக் கொண்டால் வாள் சண்டை என அதிரடி ஆக்சன் நிறைந்த படங்களாக இருக்கும். மற்றொருபுறம் சிவாஜி படங்கள் என்றால் எக்கச்சக்க வசனங்கள் மற்றும் கட்டபொம்மன் போன்ற தலைவர்களை பிரதிபலிக்கும் படங்களாக தான் இருந்தது.

இவர்கள் இருவரின் திரைப்பட ஜானரும் வேறு விதமாக கொடுத்து வெற்றி பெற்று வந்தனர். இந்நிலையில் இவர்களுக்குள் சவால் விடும் படி ஒரு சம்பவம் அரங்கேறி இருந்தது. அதாவது எம்ஜிஆர் திமுகவில் இணைந்த போது சிவாஜி காங்கிரஸ் பக்கம் இருந்தார். இப்போது மேடைப்பேச்சுகளில் இவர்களுக்குள் கருத்து யுத்தம் நடந்தது.

Also Read : எம்ஜிஆர், சிவாஜியை விட அதிக நாள் வாழ்ந்திருக்கிறேன்.. பெருமிதம் கொள்ளும் நடிகர்

அந்த சமயத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் எம்ஜிஆருக்கு இரண்டு சவால்கள் விட்டிருந்தார். அதாவது நடிப்பிலும், சண்டையிலும் என்னோடு போட்டி போட முடியுமா என்று மேடையில் கூறியிருந்தார். இதற்கு மற்றொரு மேடையில் சிவாஜிக்கு பதிலடி கொடுக்கும்படி எம்ஜிஆர் கூறியிருந்தார்.

அதாவது நடிப்பில் என்னுடைய பாணி வேறு, சிவாஜியின் பாணி வேறு. மேலும் சண்டையில் என்னுடன் போட்டி போட முடியுமா என்று எம்ஜிஆர் கூற அரங்கமே சிரிப்பொலியை ஏற்படுத்தியது. ஏனென்றால் சண்டை பயிற்சியில் சகலமும் கற்று கரைத்துக் கொடுத்தவர்தான் எம்ஜிஆர். அவரிடம் சிவாஜியால் போட்டி போட முடியுமா என்பது வேடிக்கையான ஒன்றுதான்.

Also Read : எம்ஜிஆர் சிவாஜி படத்துக்கு கிடைத்த A சர்டிபிகேட்.. முதன்முதலாக வாங்கிய 2 படங்கள்

Trending News