Vettaiyan Movie Update: 73 வயதானாலும் சூப்பர் ஸ்டாரின் எனர்ஜி இன்னும் குறையவே இல்லை. இப்போது இருக்கும் இளம் ஹீரோக்களுக்கெல்லாம் ரஜினி பயங்கர டஃப் கொடுத்துக் கொண்டிருக்கிறார். ஜெயிலர் படத்திற்கு பிறகு அடுத்ததாக ரஜினி, டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் தலைவர் இரண்டு முக்கியமான விஷயங்களை தோலுரித்துக் காட்டப் போகிறார்.
தற்போது வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரி, நாகர்கோயில், கடப்பா, ஹைதராபாத் போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்னும் 15 நாட்களில் மொத்த படத்தையும் முடித்துவிட்டு, பூசணிக்காய் உடைத்து படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிக்கப் போகின்றனர்.
ரஜினி வேட்டையன் படத்தில் போலீஸ் கெட்டப்பில் நடிக்கிறார் என்பது ஏற்கனவே தெரிந்த விஷயம் தான். ஆனால் இந்த படத்தில் ரெண்டு முக்கியமான விஷயங்களை தலைவர் கையில் எடுத்திருக்கிறார். டிஜே ஞானவேல் ஏற்கனவே எடுத்த ஜெய் பீம் படத்தில் லாக்கப் கொலையை பற்றி, ஒரு உண்மை கதையை சொல்லி தோலுரித்துக் காட்டினார்.
வேட்டையன் படத்தின் மையக்கரு இதுதான்
அதேபோன்றுதான் இப்போது சூப்பர் ஸ்டார் ரஜினியையும் வைத்து, ஒரு போலீஸ் மேன் செய்யும் போலி என்கவுண்டரை பற்றி வெளிச்சம் போட்டு காட்டப் போகிறார். இதை சுற்றி தான் இந்த படத்தின் கதையே அமைகிறது. அதோடு இப்போது சமுதாயத்தில் நிலவும் இன்னொரு பெரிய பிரச்சினை தான் கல்வி வியாபாரமாகுவது.
இதை எதிர்த்து ஒரு போலீஸ்காரராக வேட்டையன் படத்தில் தலைவர் சரியான சவுக்கடி கொடுக்க உள்ளார். போலி என்கவுண்டர் மற்றும் கல்வி வியாபாரமாக்கப்படுவது போன்ற இந்த இரண்டு விஷயங்களையும் வேட்டையன் படத்தில் தலைவர் அழுத்தமாக சொல்லப் போகிறார். நிச்சயம் இதை டிஜே ஞானவேலால் மட்டுமே முடியும். அதுவும் இந்த முறை சூப்பர் ஸ்டாரை வைத்து சம்பவம் செய்வதால், இந்த படம் நல்ல சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.