Jayam Ravi: ஜெயம் ரவி தற்போது படு பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் கீர்த்தி சுரேஷ், யோகி பாபு ஆகியோருடன் இவர் இணைந்து நடித்திருந்த சைரன் வெளியானது. அதை அடுத்து பிரதர், ஜீனி, தக் லைஃப் என இவர் கைவசம் ஏகப்பட்ட படங்கள் இருக்கிறது.
இந்நிலையில் புது அவதாரத்திற்கும் ஜெயம் ரவி தற்போது தயாராகி இருக்கிறார். அதாவது அண்ணன் வழியில் இயக்குனராகவும் இவர் திட்டமிட்டுள்ளார். இதை ஒரு பேட்டியில் அவர் உறுதிப்படுத்தியுள்ளார். அதன்படி தற்போது இவருடைய கைவசம் 3 ஸ்கிரிப்டுகள் இருக்கிறதாம்.
அதில் முதலாவது கதையில் யோகி பாபுவை நடிக்க வைக்க அவர் திட்டமிட்டு இருக்கிறார். இதற்காக 500 ரூபாய் அட்வான்ஸ் கொடுத்து அவரை புக் செய்து விட்டாராம். அப்போது தன்னுடைய கையில் இருந்த பணத்தை கொடுத்து தன் புது முயற்சிக்கான அஸ்திவாரத்தை யோகி பாபுவை வைத்து அவர் போட்டிருக்கிறார்.
Also read: கோடிகளை வாரி குவிக்கும் ஜெயம் ரவியின் சைரன்.. 3 வது நாள் கலெக்ஷன்
ஜெயம் ரவியின் நண்பர்கள் வட்டத்தில் ஒருவராக இருக்கும் யோகி பாபு ஒரு நல்ல தோழனாக அவருக்கு தோள் கொடுக்க சம்மதித்திருக்கிறார். அதை அடுத்து இரண்டாவது கதையில் நான்தான் நடிப்பேன். அது எனக்கு மட்டும்தான் பொருந்தும் என ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.
மேலும் மூன்றாவது கதையில் யார் வேண்டுமானாலும் நடிக்கலாம். அப்படித்தான் கதை எழுதி இருக்கிறேன். இந்த தகவல்கள் குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன் என்றும் அவர் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் இந்த ஆண்டின் இறுதியில் இது குறித்த அறிவிப்பு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆக மொத்தம் செல்வராகவன் தனுஷ் போல் ஜெயம் ரவியும் தன் அண்ணனுக்கு போட்டியாக இயக்குனர் அவதாரம் எடுக்க தயாராகி விட்டார்.
Also read: ஜெயம் ரவியை தாங்கி பிடிக்குமா சைரன்.? அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்