Thamizhum Saraswathiyum serial update,Tamil does to change Saraswathi’s mind: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் ஜெயிலிலிருந்து திரும்பிய சரஸ்வதியை வீட்டில் உள்ள அனைவரும் கண்ணும் கருத்துமாக பார்க்க வேண்டும் என்ற பெயரில் ஓவர் அலப்பறைகளை அரங்கேற்றி வருகின்றனர். அதிலும் தமிழ் இப்பதான் அன்பை அளவுக்கு அதிகமாக பொழிகிறார்.
அர்ஜுன் மற்றும் அவரது மாமா ஜெயிலுக்கு போய் கலிவரதனையும் அவரது மகனையும் ஒரு வழியாக சமாதானப்படுத்தி வீட்டிற்கு வந்து குடும்பத்தினருடன் அடுத்த கட்ட திட்டத்தை அரங்கேற்ற தயாராக இருக்கின்றனர். இதிலும் ராகினி உண்மையை உணர்ந்து கொள்ளாமல் கண்மூடித்தனமாக அர்ஜுன் சொல்வதை கேட்டு வருகிறார்.
கம்பெனியில கார்த்தி செய்த வேலை வெளிச்சத்துக்கு வராமல் அதை ஆர போட்டு குடும்பம் கொஞ்சம் சந்தோஷமாக இருக்கட்டும் என்று குடும்பத்தின் மகிழ்ச்சியையும் தமிழ் மற்றும் சரஸ்வதியின் சந்தோசத்தை ஃபோகஸ் பண்ணி வருகிறார்கள்.
சிறையில் ஏற்பட்ட காயமான ரணங்களை மறக்க முடியாமல் அல்லல்படும் சரஸ்வதிக்கு ஆறுதலாக தமிழின் ஒட்டுமொத்த குடும்பமே ஆதரவாக நிற்கிறது. இதன் முதல் கட்டமாக சரஸ்வதிக்கு என்ன செய்தால் சந்தோஷம் என ஒவ்வொருவரும் யோசித்து தங்களது பங்கை சரிவர செய்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக தமிழ் சரஸ்வதியை அருகில் இருக்கும் பூங்காவுக்கு அழைத்துச் செல்ல அங்கே குழந்தைகள் விளையாடுவதை பார்த்து சந்தோஷம் கொள்கிறார் சரஸ்வதி. இடையிடையே தமிழின் மான்னு, மயிலு, குயிலு கொஞ்சல்கள் வேற.
பூங்காவில் எதிர்பட்ட பெண் காவலாளியை பார்த்து மீண்டும் அச்சப்பட பாட்டியின் மூலம் சர்ப்ரைஸ் கொடுக்கிறார் தமிழ். பாட்டி உட்பட குடும்பத்தினர் அனைவரும் உட்கார்ந்து பேசும்போது இது அனைத்தும் கோதை செய்த ஏற்பாடு என்று தெரிய வருகிறது. ஒரு வழியாக மாத்தி மாத்தி குடும்பத்திற்குள் பெருமை பேசி சரஸ்வதியை டையடுடாக்கி விடுகிறார்கள் தமிழ் மற்றும் அவரது சகாக்கள்.