வியாழக்கிழமை, நவம்பர் 14, 2024

நெப்போலியன் மிரட்டிய 5 வில்லன் கதாபாத்திரம்.. எஜமானுக்கு தண்ணீர் காட்டிய வல்லவராயன்

5 villainous character that Actor Napolean intimidated in tamil cinema: தமிழ் சினிமாவில் 90களில் வில்லனாகவும் நடிகராகவும் தனக்கென தனி முத்திரை பதித்தவர் நெப்போலியன் என்கின்ற குமரேசன் துரைசாமி அவர்கள். இவர் அரசியல் கட்சிகளில் இருந்தபோதும்  எதிர்க்கட்சிகளை முறையற்று தாக்காமலும், தான் இருக்கும் கட்சியை பற்றி பெருமை பீற்றாமலும் இருந்த இவரது பாங்கை பற்றி ஜெயலலிதா அம்மையாரே புகழ்ந்து பேசி உள்ளாராம்.

இவரது நடிப்பில் உருவான 5 மிரட்டும் வில்லன் கதாபாத்திரங்கள் இதோ,

புது நெல்லு புது நாத்து: 1991ஆண்டு பாரதிராஜாவின் “புது நெல்லு புது நாத்து” திரைப்படத்தில் வில்லனாக முதன் முதலில் அறிமுகமானார் நெப்போலியன். தன் வயதுக்கு மீறிய பண்ணையார் கதாபாத்திரத்தில் எதிர்க்க வரும் ஏழை தொழிலாளியை கொன்று அவனது கைநாட்டு மூலமாக அவன் சொத்தை அபகரிக்கும் கொடூரனாக  மிரட்டிஇருந்தார்.

கேப்டன் மகள்:  மீண்டும் பாரதிராஜாவின் இயக்கத்தில் 1993 ஆண்டு ராஜா, குஷ்பூ நடித்த திரில்லர்கதையில் அரசியல் பெரும்புள்ளியை அழிக்கும் ராயப்பனாக உளவு பார்த்து தீவிரவாத தலைவனாக வந்து பயமுறுத்தி இருந்தார். பேட்டி ஒன்றில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மையாரிடம் இந்த படத்தை போட்டு காட்டிய போது அன்றுதான் முதன் முதலாக ஜெயலலிதாவை நேரில் பார்த்ததையும் அவர்கள் வாழ்த்தியதையும் பெருமையுடன் நினைவு கூர்ந்தார் நெப்போலியன்.

Also read: கிழக்குச் சீமையிலே விஜயகுமாரை மிஞ்சிய அல்லு அர்ஜுன்.. மாமன் சீராக இலட்சக்கணக்கில் கொட்டிக் கொடுத்த ஹீரோ

கிழக்கு சீமையிலே: எவர்கிரீன் சென்டிமென்ட் ஆன அண்ணன் தங்கை பாசத்தை எடுத்துக் கூறும் கிழக்குச் சீமையிலே திரைப்படத்தில் ராதிகாவின் கணவனாக சிவனாண்டி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நெப்போலியன். அண்ணன் தங்கையை சேரவிடாமல் தடுக்கும் முரட்டு வில்லனாக பார்வையாளர்களை கொந்தளிக்க வைத்தார் இந்த சிவனாண்டி.

எஜமான்: படிப்படியாக வளர்ந்து வந்த நெப்போலியனுக்கு எஜமானில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் வில்லனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.  ஜமானில் இவரது வல்லவராயன் கதாபாத்திரத்தை பார்த்த இவரது மனைவி திருமணத்திற்கு முன் இந்த கதாபாத்திரத்தினாலேயே இவரை திருமணம் செய்ய பயந்தாராம். ஒரு வழியாக இவரை சமாதானப்படுத்தி திருமணம் செய்ததாக நெப்போலியன் பேட்டி ஒன்றில் தெரிவித்து இருந்தார்.

பங்காளி: பானுப்பிரியா சைதை தமிழரசியாகவும் சத்யராஜ் இரு இடத்திலும் நடித்த பங்காளி திரைப்படத்தில் தம்பிதுரை கதாபாத்திரத்தில் மன்சூர் அலிகானுடன் சேர்ந்து  மிரட்டி இருந்தார் நெப்போலியன். ஸ்லோ பாய்சனாக ஆர்ப்பாட்டம் இல்லாத  வில்லத்தனத்தில் கொடூரமாக கொலை செய்து பார்வையாளர்களுக்கு பீதி ஏற்படுத்தி இருந்தார் இந்த தம்பிதுரை.

Also read: அஜித்தை டேமேஜ் செய்த அமரனின் விஷமிகள்.. சிவகார்த்திகேயன் கூலிப்படை செய்யும் வேலை

- Advertisement -spot_img

Trending News