Captain Vijayakanth: மறைந்த கேப்டன் விஜயகாந்த் சொந்த மைத்துனர் மற்றும் தேமுதிக கட்சியின் முக்கிய பொறுப்பில் இருப்பவர் தான் எல் கே சுதேஷ். ஆரம்ப காலத்தில் தன்னை ரொம்ப ஆக்டிவாக காட்டிக்கொண்டாலும், சமீபத்தில் சில வருடங்களாக தன்னை பெரிதாக மீடியா முன்பு சுதீஷ் காட்டிக்கொள்வது கிடையாது. இப்போதெல்லாம் பிரேமலதா விஜயகாந்த் அவர்களை முன்னிலைப்படுத்தி மறைமுகமாக தான் தன்னுடைய இருப்பை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார்.
விஜயகாந்த் கட்சி ஆரம்பித்தது அவரை விட அதிகமான நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்தவர் தான் பிரேமலதாவின் உடன் பிறந்த தம்பி சுதீஷ். அதிலும் விஜயகாந்த் தொடர்ந்து தேர்தலில் தோற்றதற்கும், ஒரு சில கட்சிகளுடன் கூட்டணி வைத்ததற்கும் முக்கிய காரணமே இந்த சுதீஷ் தான் என சொல்லப்பட்டது. பிரேமலதா மூலம் விஜயகாந்த்தை தன்னுடைய கட்டுக்குள் இவர் தான் வைத்திருந்தார் என்று அப்போதே பரவலாக பேசப்பட்டது.
இதனால்தான் சுதீஷ் தன்னை மீடியா முன்பிருந்து மறைத்துக் கொண்டார். கட்சியின் முக்கியமான முடிவுகள் எதையுமே தன் வாயால் சொல்லாமல், அக்கா பிரேமலதா மூலம் தான் பேச வைத்தார். இப்படி கடந்த சில வருடங்களாகவே சைலன்ட் மோடில் இருந்த சுதீஷ் பெயர் நேற்றிலிருந்து எந்த தொலைக்காட்சி, சமூக வலைத்தளத்தை எடுத்துக் கொண்டாலும் உருட்டப்பட்டு வருகிறது. சுதீஷ் மட்டுமில்லாமல் அவருடைய மனைவி பூர்ண ஜோதியும் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்.
பூர்ண ஜோதி நேற்று சென்னை காவலர் ஆணையத்தில் ஒரு பிரபல கட்டிட நிறுவனத்தின் மீது மோசடி புகார் ஒன்றை கொடுத்திருக்கிறார். அதில் தனக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலம் மாதவரம் 200 அடி சாலையில் இருப்பதாகவும், அதை பிரபல கட்டிட நிறுவனம் ஒன்று அப்பார்ட்மெண்ட் கட்டுவதற்கு ஒப்பந்தம் போட்டதாகவும், அந்த ஒப்பந்தத்தின்படி நில உரிமையாளரான தனக்கு 78 வீடுகள் தருவதற்கு பதிலாக முப்பது வீடுகள் மட்டுமே கொடுத்து 48 கோடி மோசடி செய்து விட்டதாகவும் சொல்லியிருக்கிறார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு ஒப்பந்தம் போட போட்டு 2020க்குள் வீடுகளை விற்று விடுவதாக தான் அந்த கட்டிட நிறுவனத்தின் பிளானாக சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் நான்கு வருடங்களை நெருங்கியும் இதுவரை கட்டிட பணிகள் எதுவுமே முடிக்கப்படவில்லை. வீடு வாங்கும் ஆசையை மக்களிடம் தூண்டிவிட்டு காசை வாங்கிக் கொண்டு, இன்னும் கட்டடத்தை முடித்துக் கொடுக்காமல் இருக்கிறார்கள்.
நெருக்கிய பண மோசடி புகார்கள்
ஒரே வீட்டை இரண்டு பேருக்கு எல்லாம் விற்று இருக்கிறார்கள். இதுவும் போதாது என்று புது வீட்டில் குடியேறாமலேயே வீட்டிற்க்கான லோன் காசை வங்கியில் கட்டிக் கொண்டிருக்கிறார்கள் அந்த நிறுவனத்தை நம்பி முடிக்கப்படாத வீட்டை வாங்கியவர்கள். கடந்த 2017 ஆம் ஆண்டில் இருந்தே இந்த கட்டிட நிறுவனத்தின் மீது புகார் இருக்கும் மேல் புகார் குவிய தொடங்கிவிட்டது.
இடம் சுதீஷ் மற்றும் பூர்ண ஜோதி தம்பதிகளுக்கு சொந்தமானது என்பதால் இந்த பிரச்சனை பெருசானால் கண்டிப்பாக பெயர் கெட்டுப் போய்விடும். அதுமட்டுமில்லாமல் அந்த கட்டிட நிறுவனத்திடம் 48 கோடியே இழக்கவும் செய்திருக்கிறார்கள். இதனால் பிரச்சனை பூதாகரமாவதற்கு முன்பு நாங்களும் அதில் பாதிக்கப்பட்டவர்கள் என அப்ரூவர் ஆகி காவலர் ஆணையத்திடம் புகார் கொடுத்து விட்டார் பூர்ண ஜோதி.