5 films where Rajini does not show heroism: பாட்ஷா படத்தில் ரஜினிக்காகவே எழுதிய பாடல் தான் ‘நீ நடந்தால் நடை அழகு’. இந்தப் பாடலில் அவருடைய ஸ்டைலிஷ் ஆன நடை, ஹேர் ஸ்டைல் என அத்துணையையும் சொல்லி இருப்பார்கள். அந்த அளவிற்கு ஸ்டைலிஷ் ஹீரோ என்றாலே அது சூப்பர் ஸ்டார் தான். சிகரெட்டை தூக்கி போட்டு பிடிப்பதும், விரல்களுக்கிடையே கூலிங் கிளாஸ் விளையாடுவது என இவர் பண்றதெல்லாம் மாஸ் தான். 73 வயதிலும் இப்போதும் இவருக்கு இளசுகளின் ரசிகர் கூட்டம் இருக்கிறது என்றால், அவருடைய படங்களில் சூப்பர் ஸ்டார் காட்டிய ஹீரோயிசத்திற்காகவே தான். ஆனால் 80களில் ரஜினி ஹீரோயிசம் காட்டாமல் நடித்த ஐந்து மறக்க முடியாத படங்களை பற்றி பார்க்கலாம்.
ஆறிலிருந்து அறுபது வரை: ரஜினிகாந்த், படாபட் ஜெயலட்சுமி, சோ, சுருளிராஜன், தேங்காய் சீனிவாசன் ஆகியோர் சேர்ந்து நடித்த படம் ஆறிலிருந்து அறுபது வரை. இதில் சூப்பர் ஸ்டார் சிறுவயதில் இருக்கும் போது தனது தந்தையை இழக்கிறார். மூத்த அண்ணனாக தன்னுடைய இரண்டு தம்பிகள் மற்றும் ஒரு தங்கையை அவர் ரொம்பவே கஷ்டப்பட்டு வளர்கிறார். கடைசியில் அவர்கள் எல்லாம் கொஞ்சம் கூட நன்றி விசுவாசம் இல்லாமல் ரஜினியை தூக்கி எறிகின்றனர்.
இதில் வறுமையின் காரணமாக சேரிப்பகுதிக்கு குடியேறி, அங்கு நண்பரின் உதவியுடன் அச்சகத்தில் பணிபுரிகிறார். அங்கு அவர் எழுதிய கதை மூலம் பின்னாளில் செம ஃபேமஸ் ஆகிவிடுகிறார். அதற்குள் அவருடைய இரண்டு குழந்தைகளும் தீ விபத்தில் இறந்து விடுகிறார்கள். இப்படி இந்த படம் முழுக்க ரஜினி தன்னை ஒரு மாஸ் ஹீரோவாக காட்டிக்கொள்ளாமல், அடிக்கு மேல் அடி வாங்கும் ஒரு ஏழை மனிதனாகவே தன்னை காட்டினார்.
ஸ்ரீ ராகவேந்திரா: 80களில் மாஸ் ஹீரோவாக இருந்த சமயத்தில் மாமிசம், மது, சிகரெட் என சூப்பர் ஸ்டார் கொஞ்சம் ஓவராகவே ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தார். ஆனால் இந்த ஸ்ரீ ராகவேந்திரா படத்தில் நடிக்க கமிட் ஆகி, அவரை பற்றி எல்லா விஷயங்களையும் தெரிந்து கொண்ட பின் சூப்பர் ஸ்டார் ஸ்ரீ ராகவேந்திராவின் பக்தராகவே மாறிவிட்டார். இந்த படத்தில் தன்னை ஒரு ஹீரோவாக காட்டாமல் சாந்தமாக ஸ்ரீ ராகவேந்திராவின் நிஜ வாழ்க்கையை வரலாற்றை தத்ரூபமாக நடித்தார். இந்த படத்தில் ஸ்ரீ ராகவேந்திராவின் பிறப்பு முதல் அவரது மகாசமாதி வரை முழு கதையும் சொல்லப்பட்டிருக்கும்.
ரஜினி ஹீரோயிசம் காட்டாத 5 படங்கள்
கை கொடுக்கும் கை: ரஜினி, ரேவதி நடிப்பில் மகேந்திரன் எழுதி இயக்கிய படம் தான் கை கொடுக்கும் கை. இந்த படத்தில் ரஜினி பார்வையற்ற ரேவதியை திருமணம் செய்து கொள்வார். ஆனால் ரேவதியின் மீது ஆசை படும் பண்ணையார், அவரை சீரழித்து விடுகிறார். அந்த நேரத்தில் பண்ணையாரை மன்னிக்க ரஜினி முடிவெடுக்கும் போது, என்ன நடக்கிறது என்பதுதான் இந்த படத்தின் கிளைமாக்ஸ். இந்த படம் முழுக்க எந்தவித அலப்பறையும் ஆர்ப்பாட்டமும் இல்லாமல் ரஜினியை இயக்குனர் மகேந்திரன் காட்டினார்.
அக்னி சாட்சி: கே பாலச்சந்தர் இயக்கத்தில் சிவகுமார், சரிதா முக்கிய கேரக்டரில் நடித்த அக்னி சாட்சி என்ற படத்தில் கமலஹாசனும், ரஜினிகாந்த் உள்ளிட்டோரும் சிறப்பு தோற்றத்தில் நடித்தனர். இதில் அவர் நிஜமான ரஜினிகாந்த் ஆகவே நடித்திருந்தாலும் எந்த ஹீரோசமும் பண்ணி இருக்க மாட்டார். இதில் ரஜினி ஒரு படத்தில் கெட்டவனாக நடித்ததற்காக சரிதா வீட்டுக்கே வந்து திட்டுவார். ஆனால் அதைக் கூட அவர் தன்மையாக எடுத்துக் கொள்வார்.
உருவங்கள் மாறலாம்: ஒய். ஜி. மகேந்திரன், சுகாசினி, எஸ்.வி. சேகர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த உருவங்கள் மாறலாம் என்ற படத்திலும் சிவாஜி கணேசன், ஜெய்சங்கர், கமலஹாசனுடன் ரஜினியும் கடவுளின் வெவ்வேறு வடிவங்களில் கேமியோ கதாபாத்திரத்தில் தோன்றினர். இதில் சில காட்சிகளுக்கு மட்டுமே ரஜினி என்ட்ரி கொடுத்தாலும் அவரை ஒரு மாஸ் ஹீரோவாக காட்டாமல், கடவுளின் ரூபமாக காட்டினார்.