ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

கூடா நட்பால் சீரழிந்த இளம் இயக்குனர்.. தேடி போய் படம் பண்ணி தூக்கி விட்ட அருண் விஜய்

Arun Vijay gave a chance to the director who was unable to release Naragasooran: கடந்த 2016 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவின் புது வரவாக இளம் இயக்குனர் கார்த்திக் நரேன், துருவங்கள் பதினாறு என்ற படத்தின் மூலம் பிரபலமானார். இருபத்தியோரு வயதே ஆன இந்த இளம் இயக்குனரின் படம் அனைவராலும் ஆச்சரியத்துடன் கவனிக்கப்பட்டது. 

காதல், ஆக்சன், காமெடி படங்களுக்கு மத்தியில் குறிஞ்சி பூவாய் பூத்தது நரேனின் துப்பறியும் கதையான துருவங்கள் பதினாறு. சிறப்பான திரை கதையினாலும் நேர்த்தியான இயக்கத்தினாலும் முன்னணி இயக்குனர்களையே வாயடைக்க செய்தார் இந்த நரேன். 

எதிர்பாக்காத அளவு பலரின் ஏகோபித்த விமர்சனங்களை பெற்று சிறந்த இயக்குனருக்கான விருதை தட்டி சென்றதோடு இந்த படம் ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது. இப்படத்தின் வெற்றிக்குப் பின் அருண் விஜய் மற்றும் நரேனின் கூட்டணி உறுதியானது. 

Also read: கை உடைஞ்சாலும் வெற்றிக்காக போராடும் அருண் விஜய்.. டாப் ஹீரோக்கள் பார்த்து கத்துக்கோங்க!

இதற்கிடையில் கார்த்திக் நரேன், கௌதம் வாஸ்து மேனன் உடன் இணைந்து பணியாற்ற தொடங்கினார். கௌதம் தயாரிப்பில் அரவிந்த்சாமி, ஸ்ரேயா நடித்த நரகாசுரன் என்ற படத்தை கடந்த 2019 ஆம் ஆண்டு இயக்கியுள்ளார். பிரச்சனைய பேக்ல போட்டு சுத்தும் கௌதமுக்கு கேட்கவா வேணும் வழக்கம் போல் பண பிரச்சனை காரணமாக இந்த படம்  இன்று வரை வெளிவர முடியாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. 

நொந்து நூடுல்ஸ் ஆன கார்த்திக் நரேன் வலைதளங்கள் மூலமாகவும் நேரடியாகவும் கௌதமிடம் எப்போது என் படத்தை ரிலீஸ் செய்யப் போகிறீர்கள் என்று கேள்வியை தொடுத்த வண்ணம் இருந்தார்

 ஒரு கட்டத்தில் அவரே டயட் ஆகி அடுத்த ப்ராஜெக்ட்டுக்கு யோசிக்க ஆரம்பித்த நிலையில் ஆபத்பாந்தவனாக அருண் விஜய், நரேனுக்கு அடுத்த படத்திற்கான வாய்ப்பை அளித்தார். முதல் படத்திற்கு பின் நான்காண்டு இடைவேளை எடுத்து இரண்டாவது படமான மாஃபியா சாப்டர் ஒன் திரைப்படத்தை வெளியிட்டார் நரேன். போதைப் பொருள் கடத்தல் டானுக்கும் அதை தடுக்கும் போலீஸ் மேனுக்கும் இடைப்பட்ட மோதலாக அமைந்தது மாஃபியா. 

அதன்பின் தொடர்ந்து தனுசு உடன் மாறன், நவரசா போன்ற படங்களை இயக்கினார் கார்த்திக். இந்த ஆண்டு அரவிந்த்சாமியின் நரகாசுரனும் அதர்வா, ரகுமான் மற்றும் சரத்துகுமார் நடித்த நிறங்கள் மூன்று திரைப்படமும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Also read: வாக்கு தவறிய கௌதம் மேனன்..! பஞ்சாயத்த முடிக்க மட்டும் போடும் வேஷம்

Trending News