புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ஜேசன் சஞ்சய் லிஸ்டில் இருக்கும் 4 ஹீரோகள்.. வாரிசு நடிகரை லாக் செய்யும் குட்டி தளபதி

Actor Vijay Son Jason Sanjay: தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்க உள்ளதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அந்தப் படத்தில் ஹீரோவாக யார் நடிக்கிறது என்பதுதான் இப்ப வரை சஸ்பென்சாக வைத்திருக்கின்றனர். ஆனால் ஜேசன் சஞ்சய் லிஸ்டில் நான்கு ஹீரோக்கள் இருக்கின்றனர்.

அதில் ஒருவர் தான் மறைந்த நடிகர் முரளியின் மகன் அதர்வா. இவர் இப்போது இருக்கும் ஹீரோக்களில் சாக்லேட் பாயாக இளசுகளை கவர்ந்தாலும், அவருக்கு எதிர்பார்த்த அளவு வெற்றிப் படம் இன்னும் அமையவில்லை என்று தான் சொல்லணும். ஒருவேளை ஜேசன் சஞ்சய் எடுக்கும் கேங்ஸ்டர் ஜோனர் படத்தின் வாய்ப்பு மட்டும் அதர்வாவுக்கு கிடைத்தால் நிச்சயம் அது அவருடைய சினிமா கேரியரின் டர்னிங் பாயிண்டாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவரைத் தொடர்ந்து டாடா புகழ் கவின், ஜேசன் சஞ்சய் தன் படத்திற்காக தேர்ந்தெடுத்து வைத்துள்ள ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார். சின்னத்திரையில் ஜொலித்த கவின், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வெள்ளித்திரைக்கு என்ட்ரி கொடுத்து லிப்ட், டாடா போன்ற படங்களின் மூலம் அசுர வளர்ச்சி அடைந்துள்ளார். இவர் அடுத்ததாக ஸ்டார் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்திற்கு பிறகு ஒருவேளை ஜேசன் சஞ்சய் கவினை தேர்வு செய்தால், அது அவருக்கு கிடைத்த ஜாக்பாட் என்று சொல்லலாம்.

Also Read: கருப்பு உடையில் செம க்ளாஸாக இருக்கும் சஞ்சய்.. அச்சு அசல் விஜய் போல் இருக்கும் லேட்டஸ்ட் போட்டோ

ஜேசன் சஞ்சய் தேர்ந்தெடுத்து வைத்திருக்கும் 4 ஹீரோக்கள்

மூன்றாவதாக ஜேசன் சஞ்சய் தேர்ந்தெடுத்திருக்கும் ஹீரோ, பிக் பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாண் தான். இவர் ரசிகைகளின் கிரஷ் மெட்டீரியல் ஆக இருந்தாலும் இவருக்கு கிடைப்பதோ சிறிய பட்ஜெட் படங்கள் மட்டுமே. ஆனால் சமீபத்தில் தான் இவருக்கு பெரிய பட்ஜெட் படங்களும் கிடைத்துக் கொண்டிருக்கிறது. கடைசியாக இவர் நடித்த பார்க்கிங் திரைப்படம் வசூலில் பட்டையை கிளப்பியது. இவரையும் தான் ஜேசன் தன்னுடைய படத்தின் ஹீரோக்களின் லிஸ்டில் வைத்துள்ளார்.

நான்காவதாக அக்கட தேசத்து டாப் ஹீரோவான மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான், ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. இவர் மலையாளத்தில் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பான் இந்தியா மொழிகளில் நடித்து வருகிறார். தற்சமயம் மட்டும் இவர், கமல்- மணிரத்தினம் கூட்டணியில் உருவாகும் தக் லைஃப், சுதா கொங்கரா இயக்க உள்ள சூர்யாவின் 43-வது படம் என டாப் ஹீரோக்களின் பட வாய்ப்புகளை கையில் வைத்திருக்கிறார். அந்த வரிசையில் தற்போது ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்திலும் துல்கர் சல்மான் ஹீரோவாக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: எதிர்காலத்தில் சினிமாவிற்கு வர போகும் பிரபலங்களின் வாரிசுகள்.. கோலிவுட்டை மிரட்டும் நெப்போடிசம்

Trending News