வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

5 விஜய் பட வில்லன்களின் அழகிய மனைவிகள்.. 50 வயதில் முத்துப்பாண்டி செய்த கல்யாணம்

5 Vijay movie villians beautiful wives: கோலிவுட் சினிமாவை பொறுத்த வரைக்கும் நடிகர் விஜய் நடித்த படங்களின் வில்லன்களுக்கு எப்போதுமே தனி மவுசு அதிகம். விஜய்க்கு நிகரான மாஸ் மற்றும் கிளாஸ் இருக்கும் வில்லன்கள் தான் அவருடன் போட்டி போட்டு நடித்திருப்பார்கள். அப்படி விஜய்க்கு வில்லனாக நடித்த ஐந்து முக்கிய வில்லன்கள் சொந்த வாழ்க்கையில் ரொம்பவும் அழகான பெண்களை திருமணம் செய்து இருக்கிறார்கள். அந்த ஐந்து வில்லன்கள் மற்றும் அவர்களுடைய மனைவிகளை பற்றி பார்க்கலாம்.

ஆசிஷ் வித்யார்த்தி: இந்திய மொழிகளில் வில்லனாக கலக்கிக் கொண்டிருந்த ஆசிஷ் வித்யார்த்திக்கு நடிகர் விஜய் நடித்த கில்லி படம் தமிழில் பெரிய அடையாளத்தை வாங்கி கொடுத்தது. கபடி விளையாடும் வேலுவின் போலீஸ்கார அப்பாவாக மிரட்டி இருப்பார். அது மட்டுமில்லாமல் பகவதி படத்திலும் தொடர்ந்து இவர் விஜய்க்கு வில்லனாக நடித்திருந்தார். 60 வயதிலும் ஆசை வரும் என்ற பழமொழிக்கு ஏத்த மாதிரி இவர் தன்னுடைய 60-வது வயதில் ரூபாலி பருவா என்பவரை திருமணம் செய்திருக்கிறார்.

ஆசிஷ் வித்யார்த்தி – ரூபாலி பருவா

பிரகாஷ்ராஜ்: மதுரையில் வேலுவிடம் தனலட்சுமிக்காக மல்லுக்கட்டிய முத்துப்பாண்டி தமிழ் சினிமாவில் மறக்க முடியாத கேரக்டர். நடிகர் பிரகாஷ் ராஜ் கவர்ச்சி நடிகை டிஸ்கோ சாந்தியின் தங்கையும், நடிகையுமான லலிதா குமாரியை திருமணம் செய்து இரண்டு குழந்தைகள் பெற்ற பிறகு விவாகரத்து செய்தார். அதன் பின்னர் தன்னுடைய 50 வயதில் போனிவர்மா என்னும் அழகிய பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

பிரகாஷ் ராஜ் போனிவர்மா

Also Read:சண்டை காட்சிகள் இல்லாமல் மிகப் பெரிய வெற்றியடைந்த படங்கள்.. தந்தை மகள் பாசத்தில் அசத்திய பிரகாஷ்ராஜ்

அவினாஷ்: கன்னட நடிகர் ஆன அவினாஷ் 2003 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான திருமலை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இவர் சந்திரமுகி படத்தில் சாமியார் கேரக்டரில் நடித்த பிறகு ரசிகர்களிடையே நல்ல அடையாளம் கிடைத்தது. இவர் சின்னத்திரை நடிகை மாளவிகா என்பவரை திருமணம் செய்திருக்கிறார். மாளவிகா அண்ணி என்னும் நாடகத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரீட்சயமானவர்.

அவினாஷ் மாளவிகா

அபிமன்யு சிங்: விஜய் நடித்த தலைவா மற்றும் வேலாயுதம் போன்ற படங்களில் வில்லனாக நடித்தவர் தான் நடிகர் அபிமன்யு. கார்த்தி நடித்த தீரன் அதிகாரம் ஒன்று மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்தே படங்களிலும் இவர் நெகட்டிவ் ரோலில் மிரட்டி இருந்தார். அபிமன்யு சமீபத்தில் சார்க்ரம் என்ற அழகிய பெண்ணை கரம் பிடித்திருக்கிறார்.

அபிமன்யு சிங் சார்க்ரம்

தேவ் கில்: இந்தி மற்றும் பஞ்சாபி படங்களில் முக்கிய நடிகராக நடித்து வந்த தேவ் கில் சுறா படத்தில் சமுத்திர ராஜா என்னும் கேரக்டரில் விஜய்க்கு வில்லனாக நடித்திருந்தார். இவருக்கு சுறா படத்திற்கு பிறகு தமிழில் வேறு எந்த படங்களும் பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. இவர் ஆர்த்தி தேவ் கில் என்னும் பெண்ணை திருமணம் செய்து இருக்கிறார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.

தேவ் கில் ஆர்த்தி

Also Read:குண்டக்க மண்டக்க பேசி மரியாதையை கெடுத்துக் கொண்ட 5 நடிகர்கள்.. ராக்கெட் சர்ச்சையில் நாசமா போன பிரகாஷ்ராஜ்

Trending News