ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

லைக்காவில் தவம் கிடக்கும் ஜேசன் சஞ்சய்.. பாசம் முத்தி போய் மறைமுகமாக தளபதி செய்த வேலை

Jason Sanjay: ஒவ்வொருவரும் அவர்களுடைய திறமையை வைத்துக்கொண்டு அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி பயணிப்பது வழக்கம் தான். அது போல தான் விஜய் ஆட்ட நாயகனாக ஜொலித்து வரும் இந்த தருணத்தில் அரசியலிலும் கால் தடம் பதிக்க வேண்டும் என்று தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து உள்ளே நுழைந்து இருக்கிறார். இந்த சமயத்தில் இவருடைய மகனும் படிப்பை முடித்துவிட்டு இயக்குனராக அடியெடுத்து வைக்கப் போகிறார்.

அந்த வகையில் இவர் இயக்கப் போகும் முதல் படத்தை லைக்கா நிறுவனமான சுபாஸ்கரன் தான் தயாரிக்கப் போகிறார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். அதற்காக ஜேசன் சஞ்சய் கிட்டத்தட்ட நான்கு விதமான கதைகளை ரெடி பண்ணி லைக்காவிடம் கொடுத்து இருக்கிறார். அதே நேரத்தில் அவர் எழுதிய எல்லா கதையுமே ஆங்கிலத்தில் தான் இருக்கிறது.

அதனால் இந்த கதைகள் அனைத்தையும் தமிழாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையில் விஜய்க்கு தன் மகன் இயக்குனர் ஆகப் போகிறார் என்ற விஷயத்தில் உடன்பாடு இல்லை என்ற தகவலும் வெளியானது. ஆனாலும் தன் மகன் செய்ய போற முதல் விஷயம் வெற்றிகரமாக இருக்க வேண்டும் என்பதினால் மறைமுகமாக அவருக்கு உதவி செய்து வருகிறார்.

Also read: மார்ச் மாதம் ரீ ரிலீஸ் ஆகும் 6 படங்கள்.. விஜய்க்கும் அஜித்துக்கும் இதுல கூட போட்டியா.?

அதாவது என்னதான் ஜேசன் சஞ்சய் வெளிநாடுகளில் படிப்பை முடித்து நிறைய ஷார்ட் ஃபிலிம்ஸ் எடுத்திருந்தாலும், அதற்கு முற்றிலும் மாறுபட்ட விஷயம் தான் வெள்ளித்திரையில் படங்கள் எடுப்பது. பொதுவாக இயக்குனர்களாக இருக்கும் பலரும் ஆரம்பத்தில் முன்னணி இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த பின்பு தான் படத்தை எடுக்க ஆரம்பிப்பார்கள்.

ஆனால் ஜேசன் சஞ்சய் அந்த மாதிரி எந்த பயிற்சியும் எடுக்காததால் படத்தை இயக்கும் அனுபவம் அவரிடம் மிக கம்மியாகத்தான் இருக்கும். இதனால் இவருடைய வெற்றிக்கு எந்தவித பங்கமும் வந்து விடக்கூடாது என்பதற்காக விஜய் மறைமுகமாக அவருடைய இயக்குனரை அனுப்பி வைத்திருக்கிறார். இவர் சச்சின் படத்தை எடுத்த ஜான் மகேந்திரன். இவர் யார் என்றால் மறைந்த இயக்குனர் மகேந்திரனின் மகன்.

தற்போது ஜான் மகேந்திரன் தான் ஜேசன் சஞ்சய்க்கு உதவி செய்து வருகிறார். இதையெல்லாம் தொடர்ந்து அனைத்து விஷயங்களும் சரியாக போய்க் கொண்டிருக்கும் நேரத்தில் லைக்காவும் முறையாக ஆபீஸ் ஒன்றை ரெடி பண்ணி கொடுத்து இருக்கிறார். ஏப்ரல், மே மாதங்களில் படப்பிடிப்பு ஆரம்பமாகப் போகிறது. மேலும் இதில் கதாநாயகனாக துல்கர் சல்மான் நடிக்கப் போகிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளிவரும்.

Also read: 5 முன்னணி ஹீரோக்களின் முதல் 50 கோடி படங்கள்.. அஜித் vs விஜய், ஜெயித்தது யார் தெரியுமா?

Trending News