ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

ஜெயிலர் படம் ரஜினியால ஹிட் ஆகல, என்னால தான்.. 5 கோடி சம்பளம் கேட்டு அசால்ட் காட்டும் நடிகை

Jailer movie: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான ஜெயிலர் திரைப்படம் வசூலில் பட்டையை கிளப்பியது. நெல்சன் திலிப் குமார் இயக்கிய இந்த படத்தில் கோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மற்றும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் உள்ளிட்டோரும் இணைந்து நடித்தனர்.

இதனால் இந்திய அளவில் ஜெயிலர் படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. ஆனால் இந்த படத்தின் வெற்றிக்கு ரஜினி காரணம் கிடையாது, என்னால் தான் ஜெயிலர் ஹிட் ஆனது என்று நடிகை தமன்னா பெருமை பேசுகிறார். ஜெயிலர் படத்தில் அவர் ஆடிய காவலா என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது.

இதில் இறங்கி குத்தாட்டம் போட்ட தமன்னாவிற்கு அதிக சம்பளம் தரப்பட்டது. அதனால் இப்போது ஒரு ஐட்டம் பாடலுக்கு ஆடனும்னா 5 கோடி சம்பளம் கேட்கிறார். எதுக்கு இவ்வளவு சம்பளம் கேட்கிறார் என்று பார்த்தால், ‘ஜெயிலர் என்னால் தான் ஹிட்டுன்னு’ சொல்றாங்களாம். அந்த படத்தில் நடித்த ரஜினியை எல்லாம் அவர் யோசிக்காமல் சொல்லி இருக்காங்க.

Also Read: சொந்தத் தொழிலில் கல்லா கட்டும் மில்க் பியூட்டி.. அடேங்கப்பா! தமன்னா தொடங்கி இருக்கும் பிசினஸ் இதுதானா?

ஓவராக பேசும் ஜெயிலர் பட நடிகை

ஆனால் பல வருடங்களாக தமிழ் சினிமா வாய்ப்பு கிடைக்காமல் தவித்த தமன்னா, ஜெயிலர் படத்தில் காவலா என்ற ஒரே பாடலில் நடனமாடி இளசுகளை குதூகலப்படுத்தியதன் மூலம் விட்ட இடத்தை பிடித்தார் என நினைத்தோம். ஆனா அவருக்கு இனிமேல் தமிழில் பட வாய்ப்பு கிடைக்க சான்ஸ் இல்லை.

ஏனென்றால் ஓவர் திமிரு தெனாவட்டுடன் ஜெயிலர் படம் என்னால தான் ஓடிச்சு என சொன்ன தமன்னாவிற்கு, இனிமேல் கோலிவுட்டில் நடிக்க வாய்ப்பு வருவது கஷ்டம் தான். விரைவில் பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை திருமணம் செய்து கொள்ள போகும் தமன்னா, அப்படியே வடக்கு பக்கமே தலை வைத்து படுத்துக்க வேண்டியதுதான்.

Also Read: ரஜினி மனதில் இருந்த தமன்னாவை தூக்கி எறிய செய்த கலாநிதி.. ஷூட்டிங்கில் ஒயிட் பியூட்டி செய்த மட்டமான வேலை

Trending News