சனிக்கிழமை, நவம்பர் 23, 2024

அரசியல் எதிரியை தேர்ந்தெடுத்த தளபதி.. எதிராக கிளம்பிய விஜய் இணைய கூலிப்படைகள்

Thalapathy Vijay chose his own political enemy: “உன் எதிரி யார் என்று சொல் நீ யார் என்று சொல்கிறேன்” என்ற தனி ஒருவன் படத்தின் வசனத்திற்கு ஏற்ப நமது எதிரியே நம்மை யார் என்று அடையாளப்படுத்துவார்கள். அந்த வகையில் தளபதி விஜய் அரசியலில் தன் வெற்றியை உறுதி செய்வதற்காக பலமான எதிரியை தேர்ந்தெடுத்து உள்ளார். 

தமிழ் சினிமாவில் தன் படங்களின் வெற்றியை தலைக்கு ஏற்றாமல் கம்முனு இருந்த நம்ம தளபதியை, அரசியல் கட்சிகள் பல ஒன்று சேர்ந்து ஒவ்வொரு படத்தின் ரிலீஸ் போதும் பல்வேறு பிரச்சனைகளை எழுப்பி படத்தை வெளியிட முடியாமல் பாடாய்படுத்தி வந்தனர். ஒரு கட்டம் வரை உம்முன்னு இருந்த நம்ம தளபதி இறுதியில் வெகுண்டு எழுந்தார். 

தான் நடிக்கும் படத்திலும், வெற்றி விழாக்களிலும் நேரடியாகவே அரசியல் கட்சிகளை டேமேஜ் செய்து அவர்களின் வாக்குறுதிகள், இலவசங்களை கேலிக்கையாக்கி ரிவீட் அடித்தார் தளபதி. விஜய் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்கிறாரே அரசியலுக்கு வருவாரா இல்லையா என்பது  சாமானியன் முதல் சர்க்கார் வரை பலரின் எதிர்பார்ப்பாக இருந்தது. 

Also read :வெங்கட் பிரபுவுக்காக ரஷ்யா போன அர்ச்சனா கல்பாத்தி.. விஜய் போட்ட ஆர்டரால் இறங்கி வேலை செய்யும் தயாரிப்பாளர்

தமிழக வெற்றி கழகம் என தனது அரசியல் கட்சியின் பெயரை அறிவித்து அதிரடியாக அரசியலுக்குள் நுழைந்துள்ளார் தளபதி. இதை  சினிமா பிரபலங்கள் தொடங்கி பல்வேறு அரசியல் பிரமுகர்களும் ஆதரித்து உள்ளனர். விஜய்யின் அரசியல் வரவு பற்றி திமுகவின் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதியிடம் கேட்டபோது, “இது அவரவர் உரிமை, விஜய் அரசியலுக்கு வருவதற்கு வாழ்த்துக்கள்” என்று முடித்துவிட்டார். 

 அதிக சம்பளத்துடன் டாப் நடிகர் ஆகியாச்சு! ரஜினியின் சூப்பர் ஸ்டார் பட்டம்,காக்கா கழுகு கதை, என அனைத்திற்கும் தலைவரை இப்ப முற்றுப்புள்ளி வச்சிட்டாரு. அவர் சப்போர்ட் செய்ததன் மூலம் தலைவரின் ரசிகர்களும் விஜய்யை ஆதரித்து உள்ளனர். எனவே சினிமா சண்டை என எல்லாத்தையும் ஓரங்கட்டிட்டு தற்போது தேர்தலில் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் பொருட்டு முழு நேர அரசியல்வாதியாக களமிறங்க போகிறார்

இப்போது  அரசியலில் இருக்கும் பலமான எதிரியாக திமுகவை சேர்ந்த உதயநிதியை ஸ்கெட்ச் போட்டு வைத்திருக்கிறார் விஜய். இணைய கூலிகள் மூலமாகவே தேர்தல் வெற்றி தீர்மானிக்கப்படுவதால் அரசியல் ரீதியாகஇப்போது இருந்தே விஜய்க்கு சப்போர்ட் செய்து  இணைய கூலிப்படைகள் தங்களது வேலையை ஆரம்பித்து உள்ளனர். ஆளும் கட்சி மற்றும் மற்ற கட்சியினர் செய்யும் செயல்களை விமர்சித்தும் தமிழக வெற்றி கழகத்தை முன்னிறுத்தியும் இணையத்தில் செய்திகள் பரப்பி வெற்றியை நோக்கி செல்கிறது தமிழக வெற்றி கழகம்!

Also read:20 வருடம் கழித்து ரீ-ரிலீஸ் ஆகும் விஜய்யின் படம்.. வசீகராவை மிஞ்சிய காமெடியின் வெறித்தனம்

- Advertisement -spot_img

Trending News