Director Bala: உண்மையும் நேர்மையும் இருக்கும் இடத்தில் தான் கோபம் அதிகமாக இருக்கும் என்று சொல்வார்கள். அது போல தான் இயக்குனர் பாலாவுக்கும் படம் எடுப்பதில் இருக்கும் ஆர்வத்தால் பலரிடமும் மோதி இருக்கிறார். ஆனால் அந்தப் படம் விருதை வாங்கும் அளவிற்கு தொட வேண்டும் என்ற லட்சியமும் அதிகம் உண்டு. அதனாலேயே அவர் நினைக்கிற மாதிரி காட்சிகள் வரவேண்டும் என்று நடிகர்கள் நடிகைகளை பாடா படுத்தி எடுத்து ஒரு வழி ஆக்கிவிடுவார்.
இருந்தாலும் பாலாவிடம் இருக்கும் மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் கதையை நம்பி துணிச்சலுடன் படத்தை இயக்கக்கூடிய ஒரே இயக்குனர். பொதுவாக மற்ற இயக்குனர்கள் குறிப்பிட்ட சில நடிகர்கள் நடித்தால் தான் நன்றாக இருக்கும் என்று ஹீரோக்களை நம்பி களமிறங்குவார்கள். ஆனால் பாலாவோ கதையே நம்பி எப்பேர்ப்பட்ட நடிகர்களையும் நடிக்க வைத்து விடும் திறமை உண்டு. அப்படி இவர் மூலம் நான்கு நடிகர்களின் எதிர்காலம் பிரகாசமாக அமைந்திருக்கிறது.
விக்ரம்: கிட்டத்தட்ட சினிமாவிற்குள் நுழைந்து 10வருடங்கள் ஆனநிலையில் தான் சேது படத்தின் மூலம் விக்ரமோட சினிமா கேரியரே பிரகாசமாக வர ஆரம்பித்தது. இதனைத் தொடர்ந்து விக்ரமுக்கு பட வாய்ப்புகள் வந்தது. மறுபடியும் இவர்களுடைய காம்போவில் பிதாமகன் படம் வந்து விருது வாங்கும் அளவிற்கு உச்சத்தை தொட்டது. அதன் பிறகு தான் விக்ரம் முன்னணி நடிகர்களில் ஒருவராகவே இடம் பிடித்தார்.
Also read: விஜய்க்கு சூர்யா வாய்ப்பு கொடுக்கலைன்னா இப்ப அட்ரஸ் தெரியாம போயிருப்பாரு.. சர்ச்சையை கிளப்பி ஞானவேல்
சூர்யா: சினிமாவிற்குள் நுழைந்த பொழுது கிடைக்கும் கதாபாத்திரத்தை நடித்துக் கொண்டு சராசரியான ஒரு நடிகராக தான் வந்தார். அதிலும் இவருக்கு நடிப்பே வரவில்லை என்று கேலி பண்ணும் அளவிற்கு விமர்சனங்களை பெற்று கஷ்டப்பட்டு வந்தார். அந்த சமயத்தில் தான் பாலா இயக்கத்தில் நந்தா படத்தில் நடித்ததன் மூலம் சூர்யாவின் கேரியரே வேற லெவலில் மாறிவிட்டது.
இதற்கு அடுத்தபடியாக பிதாமகன் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தை கொடுத்து வெற்றி பெற வைத்தார். இதனாலேயே பாலாவை சூர்யா அண்ணன் என்று தான் கூப்பிடுவார். சூர்யா வீட்ல எந்த ஒரு நிகழ்ச்சி நடந்தாலும் அதில் கண்டிப்பாக பாலா இருப்பார். அந்த அளவிற்கு நெருக்கத்துடன் பழகினார்கள்.
ஆர்யா: ரொமான்டிக் ஹீரோவாகவும், 100 ல ஒரு நடிகராகவும் தான் ஆரியா சினிமாவில் பயணித்து வந்தார். அப்பொழுது பாலா இயக்கத்தில் நான் கடவுள் என்ற படத்தின் மூலம் இவருக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். இதனை அடுத்து அவன் இவன் படத்திலும் வாய்ப்பு கொடுத்து ஒரு எதிர்காலத்தை அமைத்துக் கொடுத்தார்.
கருணாஸ்: நந்தா என்ற படத்தின் மூலம் லொடுக்கு பாண்டி என்ற பெயருடன் அறிமுகமானார். இதன் மூலம் அடுத்து ஒவ்வொரு வருடங்களிலும் 10 படங்களுக்கும் மேல் நடிக்கும் வாய்ப்பை பெற்று காமெடி நடிகராக வலம் வந்தார். இதற்கிடையில் கதாநாயகனாகவும், இசையமைப்பாளர் மற்றும் பாடகர் போற்ற அனைத்து திறமைகளையும் வெளி காட்டி இவருக்கு என்று தனித்துவமான பெயரை எடுத்து ஜெயித்து காட்டிவிட்டார்.
Also read: வெற்றிமாறன், சுதா கொங்காராவை வெயிட்டிங் லிஸ்டில் வைத்த சூர்யா.. வருஷகணக்கா சொல்லும் காரணம்