Director Bala: குட்டு பட்டாலும் மோதிர கையால குட்டு படனும்னு ஒரு பழமொழி சொல்லுவாங்க. ஒரு காலத்தில் பாலாவுக்கு இப்படித்தான் பேர் இருந்தது. பாலா படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்து விட்டாலே பாதி நடிகன் ஆகி விடலாம் என நடிகர்கள் அவருடைய படத்தில் போட்டி போட்டு நடித்த சம்பவம் எல்லாம் இருக்கிறது. ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது, அதற்கு காரணம் இயக்குனர் பாலா தான். சில நேரங்களில் தத்ரூபமாக காட்சிகளை படமாக்குகிறேன் என்ற பெயரில் நடிகர்களை ரொம்பவும் சித்திரவதை செய்திருக்கிறார். அப்படி டார்ச்சரில் பாலா உச்சம் தொட்ட ஐந்து சம்பவங்களை பற்றி பார்க்கலாம்.
ஆர் கே சுரேஷ்: சசிகுமார் மற்றும் வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளியான படம் தான் தாரை தப்பட்டை. இந்த படத்தில் ஆர் கே சுரேஷ் கருப்பையா என்னும் கேரக்டரில் வில்லனாக நடித்திருப்பார். படத்தின் கிளைமாக்ஸ் சீனில் சசிகுமார் மற்றும் ஆர் கே சுரேஷ் இருவருக்கும் இடையே பயங்கரமான சண்டை நடத்தும். இதில் ஆர்கே சுரேஷ் கீழே விழுவது போல் ஒரு காட்சி அமைப்பில், சீன் தத்ரூபமாக இருக்க வேண்டும் என்று உண்மையிலேயே அவரை கீழே விழ வைத்திருக்கிறார் இயக்குனர் பாலா.
துருவ் விக்ரம்: நடிகர் விக்ரம் தன்னுடைய ஆஸ்தான இயக்குனரான பாலா தான் தன்னுடைய மகன் துருவ் விக்ரமை அறிமுகப்படுத்த வேண்டும் என்பதில் ஆரம்பத்தில் ரொம்பவும் உறுதியாக இருந்தார். அர்ஜுன் ரெட்டி படத்தை தமிழில் ரீமேக் செய்து அதை பாலா இயக்க வேண்டும் என்பதுதான் பிளான். ஆனால் எந்த விதிகளுக்குள்ளும் கட்டுப்படாத பாலா இஷ்டத்திற்கு கதையை மாற்றியதோடு நிறைய காட்சிகளின் படப்பிடிப்பில் விக்ரம் மகன் துருவை போட்டு பொளந்து எடுத்திருக்கிறார்.
Also Read:பாலாவுக்கே அப்பன் நானு.. ஹீரோயினிடம் மிருக புத்தியை காட்டி ரெட் கார்டு வாங்கிய இயக்குனர்
அதர்வா: இந்தியா ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டிருந்த போது இருந்த கொத்தடிமைகள் வேலையைப் பற்றி எடுத்துச் சொல்ல படம் தான் பரதேசி. பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த படம் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு வெற்றியைப் பெறவில்லை. இதில் கிளைமாக்ஸ் காட்சி ஒன்றில் வேதிகா அந்த கொத்தடிமை வேலைக்கு வருவதை பார்க்கும் அதர்வா கதறி அழுது மலை மேல் இருந்து புரண்டு விழுவது போல் ஒரு காட்சி இருக்கும். இதில் அதர்வாவை உண்மையாகவே உருண்டு விழ வைத்திருக்கிறார்.
அழகன் தமிழ்மணி: பாலா இயக்கத்தில் ஆர்யா நடித்த நான் கடவுள் படம் வணிக ரீதியாக வெற்றி பெற விட்டாலும், விமர்சன ரீதியாக பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதில் அகோரி ஆக இருக்கும் ஆர்யாவின் அப்பாவாக நடிகர் அழகன் தமிழ்மணி நடித்திருப்பார். இதில் ஒரு காட்சியில் 30 அடி பள்ளத்தில் அழகன் தமிழ் மணியை உண்மையாகவே பாலா குதிக்க வைத்ததால் கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்திருக்கிறார்.
சூர்யா: சூர்யாவுக்கு தமிழ் சினிமாவில் பெரிய அடையாளத்தை கொடுத்தவர் இயக்குனர் பாலா. அப்படி இருக்கும் பட்சத்தில் வணங்கான் படத்தில் இருந்து சூர்யா விலகியது எதனால் என்பது இன்று வரை பெரிய சந்தேகமாக இருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் ஒரு முறை பாலா சூர்யாவை வெறும் காலில் வெயிலில் ஓடுவது போன்ற ஒரு காட்சியை தொடர்ந்து மூன்று நாட்களாக படம் ஆக்கி உண்மையிலேயே சூர்யாவை வெயிலில் ஓட வைத்திருக்கிறார்.
Also Read:நீங்க தான் தைரியமான ஆளாச்சே, அவர வச்சு படம் எடுங்க.. பாலாவை சீண்டிப் பார்க்கும் ப்ளூ சட்டை