Actress Samantha: சமந்தா இப்போது மீண்டும் பழைய ஃபார்முக்கு வந்து விட்டார். இடையில் உடல் நல பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த அவர் அதிக படங்களை ஒப்புக்கொள்ளாமல் சிகிச்சை பெற்று வந்தார். அதனால் இடையில் போட்டி நடிகைகள் பலரும் வாய்ப்புகளை அள்ளி வந்தனர்.
தற்போது அவர்களை எல்லாம் ஓரம் கட்டும் முயற்சியில் அம்மணி இறங்கி இருக்கிறார். மீண்டும் ஜிம்முக்கு செல்வது, வெக்கேஷன் சென்று மனதை அமைதிப்படுத்துவது என குதூகலம் ஆகி வருகிறார். மலேசியா, சிங்கப்பூர் என ஒரே அமர்க்களம் தான். சமீபத்தில் கூட இவருடைய தாராள போட்டோ வெளிவந்து ஆச்சரியப்படுத்தியது.
மேலும் மலேசியாவில் ஒரு நகைக்கடையை திறந்து வைத்த சமந்தா ஹைதராபாத்தில் இருக்கும் வீடு, பங்களாவை எல்லாம் கிடப்பில் போட்டுவிட்டு மும்பையில் செட்டில் ஆகிவிட்டாராம். ஏற்கனவே ராஜு பாய் சூர்யா மும்பையில் பிசினஸ், நடிப்பு என அங்கேயே குடும்பத்தோடு டேரா போட்டுள்ளார்.
Also read: சாட்டை எடுத்து நாட்டை திருத்து.. ரஜினி அஜித் செய்யாததை செய்து காட்டிய விஜய்
அவருக்கு போட்டியாக சமந்தாவும் மும்பைக்கு வந்துள்ளார். அங்கு பல தயாரிப்பாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வரும் இவர் அடுத்தடுத்த படங்களிலும் கமிட் ஆகி வருகிறாராம். அது மட்டும் அல்லாமல் ஐந்து படங்களை இவர் சொந்த தயாரிப்பில் தயாரிக்க போவதாகவும் ஒரு தகவல் கசிந்துள்ளது.
இப்படி சமந்தா போகும் ஸ்பீடை பார்த்தால் போட்டி நடிகைகள் அனைவரும் காலிதான் போலிருக்கிறது. நடிப்பையும் விடாமல் சைடில் பட தயாரிப்பு வேலைகளையும் பார்த்து வரும் இவர் இனிமேல் என் ஆட்டம் வேற மாதிரி என களமிறங்கி உள்ளார்.
ஆக மொத்தம் டாப் ஹீரோக்களை போல் சம்பாதித்த காசை முதலீடு செய்ய இவர் சினிமாவையே தேர்ந்தெடுத்து இருக்கிறார். ஆனால் இதில் அவர் வெற்றி பெறுவாரா அல்லது நஷ்டத்தை சந்திப்பாரா என்பது போகப் போகத்தான் தெரியும். ஆக மொத்தம் ராஜு பாய்க்கு போட்டியாக வந்துவிட்டார் நம் யசோதா.