ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 5, 2025

சினிமால இருந்து சீரியல் போய் மீண்டும் செம கம்பேக் கொடுத்த 5 நடிகைகள்.. சித்தி ஆடும் ஆடுபுலி ஆட்டம்

5 actresses who went serial from cinema and gave a comeback: சின்னத்திரை நாடகங்களில் வெள்ளி திரையிலிருந்து வரும் நடிகர் நடிகைகளுக்கு தனி மவுசு தான். சினிமாவில் நடித்து முன்னணி நடிகையாக இருந்த போதும் சின்னத்திரை வாயிலாக மக்களுடன் நெருங்கும் வாய்ப்பை பெறுவதால் இதை மிஸ் பண்ண தவறுவதில்லை நம் நடிகைகள். அவ்வாறு  சின்னத்திரையில் கலக்கிய 5 நடிகைகளை காணலாம்

மௌனிகா: 90ஸ் காலகட்டங்களில் பாலு மகேந்திராவின் வண்ண வண்ண பூக்கள், மே மாதம் போன்ற படங்களில் நடித்த மௌனிகா சன் டிவியில் ஒளிபரப்பான “சொந்தம்” என்கின்ற சீரியல் மூலம் தமிழ் நெஞ்சங்களை கொள்ளை கொண்டவர். இதில் இவரது அகிலா கதாபாத்திரம் கலைஞர் கருணாநிதியை மிகவும் கவர்ந்த ஒன்று. திரைத்துறையை விட்டு ஒதுங்கி இருந்தவர் மீண்டும் கடைக்குட்டி சிங்கம், கண்ணகி போன்ற படங்களில்  நடித்திருந்தார் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஆஹா கல்யாணம் என்ற தொடரிலும் கலக்கி வருகிறார் மௌனிகா. 

நளினி: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்த நளினி திருமணத்திற்கு பின் தமிழ் சினிமாவிற்கு ஒரு பெரிய கும்பிடு போட்டு ஒதுங்கி இருந்தார். இவரை மீண்டும் சின்னத்திரைக்கு இழுத்து வந்த பெருமை குட்டி பத்மினியை சாரும். சன் டிவியில் ஒளிபரப்பான கிருஷ்ணதாசி சீரியலில் ஜெமினி கணேசனுக்கு எதிரான அழுத்தமான கதாபாத்திரத்தில் பின்னி பெடல் எடுத்தார் நளினி. மீண்டும் லண்டன், அரண்மனை 3, போன்ற படங்களில் நடித்திருந்த நளினி தற்போது விக்ரம் வேதா சீரியலில் நடித்து வருகிறார். 

Also read: தேவயானி கணவர் இயக்கிய 4 படங்கள்.. அஜித்துக்கு கொடுத்த சூப்பர் ஹிட்

தேவயானி: அஜித், விஜய் என முன்னணி நடிகர்களுடன் ஜோடிசேர்ந்த தேவயானி திருமணத்திற்கு பின் சன் டிவியில் ஒளிபரப்பான கோலங்கள் சீரியலில் அபி என்ற கேரக்டரில் நடித்ததன் மூலம் குடும்பப் பெண்களின் அபிமானியாக மாறி இருந்தார். மீண்டும் சினிமா பக்கம் திரும்பிய தேவயானி நியூ, மதகஜராஜா போன்ற படங்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

லதாராவ்: 90ஸ் காலகட்டங்களில் சின்ன திரையில் புகழ்பெற்ற நட்சத்திர ஜோடி என்றால் லதாராவ் மற்றும் ராஜ்கமல் தான். ஒரே வண்ண ஆடையில் தோற்றமளிக்கும் இந்த ஜோடிகள் அந்த காலகட்டத்தில் செம டிரெண்டிங்கில் இருந்தார்கள். 30க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ள லதாராவ் தில்லாலங்கடி,நிமிர்ந்து நில் போன்ற படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார்.

ராதிகா: எம் ஆர் ராதாவின் கலை வாரிசு என அடையாளப்படுத்தப்பட்ட ராதிகா, சின்னத்திரை தொடங்கிய காலத்தில் இருந்தே தனது ராடன் தயாரிப்பு நிறுவனம் மூலம் பல வெற்றிகரமான சீரியல்களை தயாரித்தும் நடித்தும் உள்ளார்.  இன்று வரை வெற்றி நடிகையாக சின்னத்திரை வெள்ளித்திரை இரண்டையும் சமமாக பேலன்ஸ் பண்ணி ஜொலித்து வருபவர் இவர் மட்டுமே. கடந்த ஆண்டு இவன் நடிப்பில் வெளிவந்த பிரதீப் பின் லவ் டுடே வெற்றி நடை போட்டது அனைவரும் அறிந்ததே!

Also read: ராதிகாவையும் தாண்டி விஜயகாந்தை ஈர்த்த மற்றொரு நடிகை.. 3 படங்களில் கேப்டன் உடன் ஒர்க் அவுட் ஆன கெமிஸ்ட்ரி

Trending News