Manjummel Boys: சினிமாவுக்கு மொழி என்பது ஒரு எல்லை இல்லை என பெரிய அளவில் பேசப்படுகிறது. இருந்தாலும் இன்றைய தேதி வரை நம்ம ஹீரோக்களின் படங்களை அண்டை மாநிலங்களில் ரிலீஸ் செய்வது என்பது குதிரை கொம்பான விஷயம்தான். அதே நேரத்தில் தமிழ்நாட்டில் நிலைமையே வேற. முன்னணி ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் ஆனாலும் சரி, பண்டிகை நாட்களில் படங்கள் ரிலீஸ் ஆனாலும் சரி அதே நாள் அதே தேதியில் பிற மொழி படங்கள் தமிழ்நாட்டில் எந்த தடையும் இல்லாமல் ரிலீஸ் ஆகும். அதேபோன்று கதை நன்றாக இருந்தால் தமிழ் மக்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள். அப்படி தமிழகத்தில் ஹிட்டடித்த ஆறு பிற மொழி படங்களை பற்றி பார்க்கலாம்.
கே ஜி எஃப்: இந்திய அளவில் ஒரு கன்னட சினிமா பெரிய அளவில் கொண்டாடப்பட்டது என்றால் அது கே ஜி எஃப் தான். அந்தப் படத்தின் ஹீரோவாக நடித்த யாஷ் கூட சினிமா ரசிகர்களால் பெரிய அளவில் வரவேற்பை பெற்றார். தமிழ்நாட்டில் இந்த படம் தளபதி விஜய் நடித்த பீஸ்ட் படத்துடன் மோதியது. இந்த படம் ரிலீஸ் ஆவதற்கு தமிழகத்தில் எந்த ஒரு சிக்கலும் ஏற்படவில்லை. அதே நேரத்தில் தமிழகத்தில் நல்ல வசூலையும் பெற்றது. பீஸ்ட் படத்துடன் போட்டியிட்டு தமிழகத்தில் 100 கோடி வசூல் செய்தது.
ஆர்ஆர்ஆர்: இயக்குனர் ராஜமவுலி தெலுங்கு சினிமாவில் முக்கியமான ஆளாக இருந்தாலும் அவருக்கு தமிழகத்திலும் நல்ல வரவேற்பு இருக்கிறது. அவர் இயக்கிய மாவீரன், நான் ஈ , பாகுபலி படங்களை தொடர்ந்து ஆர்ஆர்ஆர் படமும் பெரிய அளவில் வெற்றி பெற்றது. ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான இந்த படம் தமிழ்நாட்டில் மட்டும் இரண்டு வாரங்களில் 75 கோடி வசூலை பெற்றது.
Also Read:7 நாட்களில் இத்தனை கோடியா?. மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் கலெக்ஷன் ரிப்போர்ட்
காந்தாரா: கே ஜி எஃப் படத்தை தொடர்ந்து தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்ற கன்னட படம் காந்தாரா. சுமார் 16 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு உலக அளவில் 200 கோடி வசூல் செய்தது இந்த படம். முதலில் கன்னடத்தில் ரிலீஸ் செய்யப்பட்டு அதன் பின்னர் அந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து மற்ற மொழிகளில் ரிலீசான இந்த படத்திற்கு தமிழகத்தில் பெரிய வரவேற்பு கிடைத்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பட குழுவை நேரில் அழைத்து பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
புஷ்பா: அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் நடிப்பில் பெரிய அளவில் வெற்றி பெற்ற தெலுங்கு படம் புஷ்பா. இந்த படம் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்வதற்கு முக்கிய காரணம் படத்தின் இசைதான். இதில் ஒரே பாடலுக்கு வந்த சமந்தா ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவையும் படத்தின் பக்கம் திருப்பி விட்டார். புஷ்பா படம் தமிழகத்தில் நல்ல வரவேற்பு பெற்றதோடு, 25 கோடி வசூலையும் வாரி குவித்தது.
பிரேமம்: பொதுவாக மலையாள படங்களுக்கு தமிழ் சினிமா ரசிகர்களிடையே எப்போதுமே நல்ல வரவேற்பு இருக்கும். அதிலும் நிவின்பாலி நடித்த பிரேமம் படத்தின் தாக்கம் இன்னமும் தமிழ்நாட்டில் இருக்கிறது. ஆட்டோகிராப் படத்தின் சாயலை கொண்டு இந்த படம் வெளியாகி இருந்தாலும் இதில் நடித்த நடிகர்கள் மற்றும் கதைகளம் பெரிய அளவில் மக்களை ஈர்த்தது. மேலும் பிரேமம் படம் தமிழ்நாட்டில் இரண்டு கோடி வசூல் செய்தது.
மஞ்சும்மல் பாய்ஸ்: இசை ரசிகர்களின் ப்ளே லிஸ்டில் நீங்காத இடத்தை பிடித்த கண்மணி அன்போடு பாடலை வைத்து மஞ்சுமல் பாய்ஸ் படம் தமிழ்நாட்டையே உலுக்கி விட்டது. சமூக வலைத்தளங்களில் முதலில் இந்த பாடல் டிரண்டாகி, அதன் பின்னர் இது என்ன படம் என பார்க்க ஆரம்பித்து இப்போது தமிழக தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தின் கிளைமாக்ஸ் சீனில் வரும் ‘ உண்டான காயம் எங்கும்” என்ற பாடல் வரிகள் மெய்சிலிர்க்க வைப்பதை பார்ப்பதற்காகவே ஒட்டுமொத்த ரசிகர்கள் கூட்டம் தியேட்டரை ஆக்கிரமித்து வருகின்றன.
Also Read:மஞ்சும்மல் பாய்ஸ் படத்தால் இளையராஜாவுக்கு ஏற்பட்ட சிக்கல்.. திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்