புதன்கிழமை, ஜனவரி 15, 2025

அக்கட தேசத்திலும் பலிக்காத ஜம்பம்.. கடைசியா ஹன்சிகா வீட்டில் கேட்ட போட்ட ஆர்டர்

Hansika motwani is finally relying on the Guardian horror movie: தமிழ் ரசிகர்களை கொள்ளை கொண்ட “குட்டி குஷ்பூ” ஹன்சிகா, திருமணத்திற்கு பின் நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவரது நடிப்பில் வெளியான படங்கள் எதிர்பார்த்த வெற்றியை அடைய முடியாததால், தெலுங்கு படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார் ஹன்சிகா. 

தமிழில் பிரபுதேவா இயக்கிய “எங்கேயும் எப்போதும்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் ஹன்சிகா. இவர் நடிப்பில் வெளிவந்த அரண்மனை,  தீயா வேலை செய்யணும் குமாரு, ஒரு கல் ஒரு கண்ணாடி, ரோமியோ ஜூலியட் போன்ற படங்கள் இவருக்கு நல்லதொரு பெயரை வாங்கித் தந்தன. 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்த ஹன்சிகாவுக்கு 2022 ஆண்டு மும்பையை சேர்ந்த தொழிலதிபர் சோஹைல் கத்தூரியா என்பவருடன் திருமணம் முடிந்தது. சில மாதங்களுக்கு திரைத்துறையை விட்டு ஒதுங்கி இருந்தவர். மீண்டும் குடும்பத்தினரின் ஒத்துழைப்புடன்  தெலுங்கு சினிமாவில் தலைகாட்ட ஆரம்பித்தார்

கடந்த ஆண்டு ஹன்சிகா, ஆதி, யோகி பாபு நடித்து வெளிவந்த பார்ட்னர் திரைப்படத்தில் ஆணின் மனோபாவத்துடன் இருக்கும் ஹன்சிகா  தனி ஒருத்தியாக இப்படத்தை தூக்கி நிறுத்தி இருந்தார். மற்ற கதாபாத்திரங்கள் திரைக்கதையுடன் இணையாமல் தனியாக காமெடி செய்வது போல் இருந்ததால் படம் பெரிய அளவில் வெற்றியாக வில்லை.

Also read: முத்தின கத்திரிக்காய்னு ஓரம் கட்டப்பட்ட 5 நடிகைகள்.. திருமணம் ஆன பிறகு மார்க்கெட்டை இழந்த ஹன்சிகா

இவை தவிர மகா, மை நேம் இஸ் சுருதி போன்ற படங்களிலும் மை3 என்ற வெப்சீரிஸிலும் நடித்திருந்த ஹன்சிகாவுக்கு குரு சரவணன் மற்றும் சபரியின் இயக்கத்தில் கார்டியன் என்கிற ஹாரர் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 

ஏற்கனவே சுந்தர்சியின் அரண்மனை1 மற்றும் இரண்டு படங்களில் பேயாக நடித்திருந்த ஹன்சிகாவிற்கு இது இன்னொரு வாய்ப்பாக அமைந்தது. ஆக்சன் கலந்து உருவாகும் இந்த ஹாரர் திரைப்படத்திற்காக அதிக நேரம் லென்ஸ் போட்டு மெனக்கெட்டு இருக்கிறார் ஹன்சிகா.

ஆக்ஷனிலும் ஆண்களுக்கு இணையாக பட்டையை கிளப்பிய ஹன்சிகாவை கண்டு படக்குழு மொத்தமும் மிரண்டு விட்டதாம். இந்த ஆண்டு மகளிர் தினத்தை ஒட்டி வெளியாகும் இத்திரைப்படத்தை மலை போல் நம்பி இருக்கும் ஹன்சிகா, இந்த படத்தின் வெற்றியை பொறுத்து திரைத்துறையில் நீடிப்பதா? வேண்டாமா? என்ற முடிவை மேற்கொள்ள உள்ளாராம்.

Also read: ஜிம்மில் தலைகீழாக தொங்கும் ஹன்சிகா.. வெறித்தனமாக வெளியான ஒர்க்அவுட் புகைப்படம்

Trending News