ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

அவருக்கு போட்டியா அப்பாவோட மானத்தை அடமானம் வச்சுட்டாங்க அம்மணி.. ஐஸ்வர்யா செய்த மிகப்பெரிய தவறு இதுதான்

Aiswarya Rajinikanth: ஆழம் தெரியாமல் காலை விடக்கூடாது என்று சும்மாவா சொன்னாங்க, முறைப்படி படிச்சு பெரிய பெரிய இயக்குனர்களிடம் உதவியாளராக பணிபுரிந்து வந்த இயக்குனர்களே துண்ட காணும் துணிய காணும் என்று ஓடுறாங்க. இதில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவருடைய அப்பாவின் பேரும் புகழையும் வைத்து இயக்குனராக ஜெயித்து விடலாம் என்று பயணித்து வருகிறார்.

அதாவது 2013இல் “3” படத்தை எடுத்து ஓரளவுக்கு வெற்றி பெறச் செய்தார். ஆனால் இதற்கு பின்னணியில் இருந்து அனைத்து உதவிகளையும் செய்து வந்தவர் தனுஷ். அதன் பின் எடுத்த படங்கள் இரண்டுமே வந்த சுவடு தெரியாமலே போய்விட்டது. ஆனால் எப்படியாவது தனுசுக்கு போட்டியாக ஒரு இயக்குனர் அந்தஸ்தை பெற்று விட வேண்டும் என்று லால் சலாம் படத்தை உருவாக்கினார்.

ஆனால் அந்த படம் மரண மொக்கை படமாக ரசிகர்களிடம் தோல்வி பெற்றது. வணிக ரீதியாகவும் நஷ்டத்தை சந்தித்தது. ஆனால் முறைப்படி இந்த படத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குனராகவே இல்லை. அதாவது படப்பிடிப்பு தளத்தில் வெறும் கடமைக்காக தான் வந்துட்டு போவாராம். ஷூட்டிங் ஸ்பாட்டில் இவருடன் ஒரு அசிஸ்டன்ட் இயக்குனர் இருப்பாராம்.

Also read: லால் சலாம் படத்தில் இவ்வளவு குறையா?. இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இன்னும் கத்துக்க வேண்டிய விஷயம்

அவர்கிட்ட எப்போதுமே ஒரு பெரிய பாட்டுல ஜூஸ் இருந்துகிட்டே இருக்கும். அதை வாங்கி குடித்துக் கொண்டே ரிலாக்ஸாக உட்கார்ந்து ஷூட் பண்ணுவாராம். அவரைப் பார்க்கும் பொழுதே ரொம்பவே சோம்பேறித்தனமாகவும், ஏதோ கடமைக்கு பண்ணனும் என்ற மெத்தனத்திலும் இருப்பது போல் தான் தெரியுமாம். அதிலும் இவருடைய அப்பா காட்சிகள் என்றால் மட்டுமே ஒரு இயக்குனர் போல பாவனை செய்து வந்திருக்கிறார்.

அந்த நேரத்தில் இவருடைய நடிப்பை பார்க்கும் பொழுது ரொம்பவே எரிச்சல் ஊட்டும் அளவிற்கு தான் இருக்குமாம். பெரிய பெரிய இயக்குனர்கள் கூட இந்த அளவிற்கு ஆர்ப்பாட்டம் பண்ண மாட்டார்கள். அந்த அளவிற்கு ஓவர் அழிச்சாட்டியம் பண்ணி இருக்கிறார். இதுதான் இவர் இயக்கிய கடைசி படமாக இருக்கும்.

ஒருவேளை இவருடைய அப்பா ரஜினி மனசு வச்சா மட்டுமே அவருடைய சொந்த காசை வைத்து இயக்குனராக படம் எடுப்பதற்கு வாய்ப்பு இருக்கும். தனுசுக்கு போட்டியாக படம் எடுக்க நினைத்தால் இப்படித்தான் ஆகும் என்று தற்போது நன்றாகவே அவருக்கு புரிந்து இருக்கும்.

Also read: எங்க அப்பா சங்கியா!. லால் சலாம் ஆடியோ வெளியீட்டு விழாவில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தின் அதிரடி பேச்சு

Trending News