நேரம் நல்லா இருந்தா ஆகஸ்ட் 15க்கு மோதிக் கொள்ளும் 4 படங்கள்.. வேட்டையனிடம் பொசுங்க போகும் மூணு தலைகள்!

4 films releasing on August 15 Independence Day: ஜெயிலரின் வெற்றிக்குப் பின் தமிழ் சினிமாவில் கம்பேக் கொடுத்து இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் லைக்கா கூட்டணியுடன் ஜெய்பீம் புகழ், த செ ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு தற்போது ஆந்திராவில் நடைபெற்று வருகிறது. ரஜினியுடன் அமிதாப்பச்சன், பகத் பாசில்,ரித்திகா சிங் முதலானோர் நடித்து வரும் நிலையில் இறுதியாக வில்லன் கேரக்டரில் பாகுபலி ராணா இணைந்துள்ளார். 

சூப்பர் ஸ்டாரின் திரைப்படம் தீபாவளிக்கு விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் சமூக கருத்து உள்ள படம் சுதந்திர தினத்திற்கு ரிலீஸ் ஆவதே நல்லது என முடிவு செய்துள்ளனர் படக் குழுவினர். 

மீண்டும் ஒரு தேசிய விருதை எதிர்நோக்கிய படமாக அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்த புஷ்பா திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்ததை தொடர்ந்து இதன் அடுத்த பாகத்திற்கான வேலைகள் விறுவிறுவென நடைபெற்று வந்தது. பான் இந்தியா மூவியாக உருவாகும் இத்திரைப்படம் ஆகஸ்ட் 15 ரிலீசாக உள்ளது. 

Also read: ரஜினியின் அடிமடியில் கை வைத்த லைக்கா.. பெத்த பாவத்துக்கு ஆண்டியான தலைவர்..!

சூர்யா நடிப்பில் தமிழ் சினிமாவை தெறிக்க விட்ட சிங்கம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு அஜய் தேவ்கன் நடித்து வெற்றி பெற்றதை அடுத்து இதன் அடுத்த பாகம் சிங்கம் ரிட்டன்ஸும் வசூலில் மாபெரும் வெற்றி அடைந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது “சிங்கம் அகென்” என பெயரிடப்பட்டுள்ள அடுத்த பாகத்தில் பாலிவுட் நட்சத்திரங்கள் அஜய் தேவ்கன் உடன் அக்ஷய்குமார், ரன்வின் சிங் என பலரும் இணைந்துள்ள நிலையில் ஆக்ரோஷமாக கர்ஜிக்க வருகிறது. திரைப்படத்தை சுதந்திர தினத்தை ஒட்டி வெளியிடப் போவதாக பாலிவுட் தரப்பு அறிவித்துள்ளது. 

தமிழ்நாடே ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கும் திரைப்படம் விஜய்யின் கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் த டைம் சுருக்கமாக G.O.A.T. இம்மாத இறுதியோடு படப்பிடிப்பு நிறைவடைவதை ஒட்டி ஆகஸ்ட் மாதம் சுதந்திர தினத்திற்கு வேட்டையனுடன் மோத தயாராகி உள்ளது. சூப்பர் ஸ்டார் பட்டம், வசூல் மன்னன் யார்? என பல்வேறு மோதல்களுக்கு இடையே வெளியாகும் இரு திரைப்படங்களும் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

Also read: விஜய் மகனை தூண்டி விட்ட ஷாலினி.. அரசியலில் தளபதிக்கு ஏற்படப்போகும் அவமானம்!