Actor Vijay: விஜய் தற்போது ஆக்சன் ஹீரோவாக கலக்கிக் கொண்டிருக்கிறார். ஃபேமிலி சென்டிமென்ட் படங்களை காட்டிலும் இதுதான் அவருக்கு ஒர்க் அவுட் ஆகிறது. அதனாலயே அவருடைய படங்கள் வசூலில் சக்கை போடு போட்டும் வருகிறது.
அந்த வகையில் விஜய்யை ஆக்சன் ஹீரோவாக மாற்றி பிளாக் பாஸ்டர் ஹிட் கொடுத்த இயக்குனர் 18 வருடங்களாக வேறு எந்த படமும் இயக்காமல் ஒதுங்கி இருக்கிறார். இது பலருக்கும் ஆச்சரியமாகத் தான் இருக்கும். இத்தனைக்கும் அவர் இயக்கிய மூன்று படங்களில் இரண்டு விஜய் படம் ஆகும்.
அந்த இயக்குனர் வேறு யாரும் அல்ல திருமலை என்ற ஹிட் படத்தை கொடுத்த பி வி ரமணா தான். விஜய் அந்த காலகட்டத்தில் அடுத்தடுத்த தோல்விகளால் துவண்டு போயிருந்த சமயம் அது. அப்போது ஜோதிகாவுடன் இணைந்து அவர் நடித்த திருமலை மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.
இந்தப் படத்திற்குப் பிறகு விஜய் நடித்த கில்லி, திருப்பாச்சி, மதுர, சிவகாசி என அத்தனை படங்களும் ஆக்சன் ட்ரீட் ஆக தான் இருந்தது. இப்படி விஜய்க்கு ஒரு ரீ என்ட்ரியை கொடுத்த இயக்குனர் ரமணா அடுத்ததாக தனுஷின் சுள்ளான், விஜய்யின் ஆதி படத்தை இயக்கினார்.
ஆனால் அதன் பிறகு அவருக்கு எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. அதனாலேயே அவர் நடிகராக களம் இறங்கியுள்ளார். கடந்த வருடம் வெளிவந்த டைனோசர்ஸ் படத்தில் கூட இவர் நடித்திருந்தார். ஆக மொத்தம் முதல் படம் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தும் கூட ரமணா மூன்று படத்தோடு முக்காடு போட்டு விட்டார்.