ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

மஞ்சுமல் பாய்ஸை தொடர்ந்து வசூல் வேட்டையாட வரும் பிரேமலு.. தெறிக்க விட்ட தமிழ் ட்ரெய்லர்

Premalu Trailer : சமீபகாலமாக மலையாள படங்களுக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் வெளியான மஞ்சுமல் பாய்ஸ் படம் நல்ல வரவேற்பு பெற்றதுடன் கிட்டத்தட்ட தமிழ்நாட்டில் மட்டும் 15 கோடிக்கு அதிகமாக வசூல் செய்துள்ளது. இதைதொடர்ந்து பிப்ரவரி ஒன்பதாம் தேதி பிரேமலு படம் மலையாளத்தில் வெளியாகி இருந்தது.

இந்தப் படம் மலையாள சினிமாவில் கிட்டத்தட்ட 100 கோடியை தாண்டி வசூல் செய்திருக்கிறது. அதோடு படத்திற்கு கிடைக்கும் வரவேற்பின் காரணமாக மார்ச் 8 ஆம் தேதி தெலுங்கு மொழியிலும் வெளியாகி இருந்தது. இப்போது தமிழ் ரசிகர்களும் இந்த படத்தை பார்க்க ஆர்வம் காட்டி வரும் நிலையில் மார்ச் 15 ஆம் தேதி தமிழில் டப்பிங் செய்து வெளியாக உள்ளது.

இந்நிலையில் பிரேமலு டிரைலர் இப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி இருக்கிறது. இளைய தலைமுறை இடையே கல்லூரி காலத்து பருவ காதலை நகைச்சுவையாக பிரேமலு படத்தில் இயக்குனர் சொல்லி உள்ளார். கிரிஷ் ஏடி இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.

Also Read : 100 கோடி வசூல் பத்தல.. மஞ்சுமல் பாய்ஸை ஓவர் டேக் செய்யும் அடுத்த படம்

அதோடு இப்போது இளைஞர்களின் பேவரைட் நடிகையாக இருக்கும் மமிதா பைஜூ பிரேமலு படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இதை தொடர்ந்து இப்போது இவருக்கு தமிழிலும் எக்கச்சக்க பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அதோடு நஸ்லென் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

மேலும் இந்த வித்தியாசமான காதல் கதை கொண்ட பிரேமலு தமிழில் டப்பிங் செய்து வெளியாவது ரசிகர்களை குஷிப்படுத்தி இருக்கிறது. அதோடு மலையாள படங்கள் இங்கு வசூலை குவித்து வருவதால் தமிழ் தயாரிப்பாளர்கள் இடையே இது சற்று கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Also Read : ஓடிடியில் விலை போகாத மஞ்சுமல் பாய்ஸ்.. வசூலை கொட்டி குவித்தாலும் ஓரம் கட்டப்பட இதுதான் முக்கிய காரணம்

- Advertisement -

Trending News