ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

லால் சலாம் தோல்விக்கு இதான் காரணம்.. உருட்டுறதுக்கும் ஒரு அளவு வேணாமா ஐஸு

Lal Salaam: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிப்பில் கடந்த மாதம் வெளியானது லால் சலாம். சூப்பர் ஸ்டார் இப்படத்தில் கெஸ்ட் ரோலில் தான் நடிக்கிறார் என்றாலும் அது அவருடைய படம் என்ற அளவுக்கு அலப்பறைகள் அதிகமாக இருந்தது.

பட குழுவினரும் அவரை முன்னிறுத்தி சில பிரமோஷன்களை செய்தார்கள். அதனாலயே மிகப்பெரிய எதிர்பார்ப்பும் இருந்தது. ஆனால் படம் வெளிவந்த பிறகு ரஜினியை பயன்படுத்த தெரியாமல் சொதப்பிவிட்டார் ஐஸ்வர்யா என்ற விமர்சனங்கள் தான் எழுந்தது.

Also read: ரஜினியின் அடிமடியில் கை வைத்த லைக்கா.. பெத்த பாவத்துக்கு ஆண்டியான தலைவர்..!

மேலும் படத்திற்கான விமர்சனங்களும் பின்னடைவாக அமைந்தது. இதனாலேயே வசூல் வேட்டை நடத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டால் லால் சலாம் மொக்கை வாங்கியது. ஆனால் குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஓட்டல என்ற கதையாக ஐஸ்வர்யா நடந்து கொள்வது வேடிக்கையாகத்தான் இருக்கிறது.

ஐஸ்வர்யாவின் உருட்டு

படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் வருவதை பார்த்ததும் அவர் அந்தர் பல்டி அடித்தார். சூப்பர் ஸ்டார் இல்லாமல் வேறு ஒரு நடிகர் நடித்திருந்தால் எங்களுடைய கருத்து மக்களை சென்றடைந்திருக்கும் என்றார். அதற்கே ரசிகர்கள் அவரை சப்பை கட்டு கட்டுகிறார் என கலாய்த்து வந்தனர்.

ஆனால் தற்போது ஐஸ்வர்யா மீண்டும் ஒரு உருட்டை உருட்டி இருக்கிறார். அதாவது படத்தின் 21 நாள் ஃபுட்டேஜ் காணாமல் போய்விட்டதாம். அதில் கிரிக்கெட் விளையாட்டு போட்டியை லைவாக எடுத்து வைத்திருந்தாராம். அந்த ஹார்ட் டிஸ்க் காணாமல் போனதால் மீண்டும் சூட்டிங் செய்ய முடியாத நிலை வந்திருக்கிறது.

அது மட்டும் இருந்திருந்தால் படம் வேற லெவலில் ரீச் ஆகி இருக்கும் என்று அவர் தற்போது ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அவரை பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

அந்த ஃபுட்டேஜ் இருந்துட்டா மட்டும் பத்து ஆஸ்கர் வாங்கி இருப்பீங்களா? என அவரை கிண்டலடித்து வருகின்றனர். இதன் மூலம் அவர் விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இல்லாதவர் என்பது தெளிவாகிறது.

Also read: ரஜினி பட நடிகரை புக் பண்ணவே பயப்படும் யூனிட்.. வளரும் போதே மண்ணை போட்டு மூடிய ஆட்டிட்யூட்

Trending News