5 low budget hit films that came in 2024: நம்ப முடியாத ஆக்சன் காட்சிகள், காதை பிளக்கும் சத்தம், பிரம்மாண்ட பொருட்செலவு, மசாலா கதை, வரம்புக்கு மீறிய கவர்ச்சி என சினிமாவை பந்தாடி வரும் இன்றைய தலைமுறைகளுக்கு மத்தியில், நாங்க இருக்கிறோம் என்று சிறப்பான திரைக்கதை அம்சத்துடன் கம்மி பட்ஜெட்டில் எளிமையாக வந்து மக்களை மகிழ்வித்த 5 படங்களை காணலாம்.
உலகத்தில் காதல்தான் எல்லாமும் என்ற ஒரு வரி கவிதையை புதிய கோணத்தில் புதிய பரிமாணத்தில் புரிய வைத்திருக்கிறார் இயக்குனர் பிரபுராம். மணிகண்டன் மற்றும் ஸ்ரீ கௌரி பிரியா நடிப்பில் வெளிவந்த லவ்வர் எளிமையான காதல் கதையாக சமூகத்திற்கு தேவையான ஒன்றுதான்.
மனிதனின் இயலாமை அவனை முரடனாக மாற்றுவதையும், பெண்ணின் பொறுமை தனத்திற்கான அளவுகோலையும் நிர்ணயித்து சிறப்புடன் ரசிக்க வைத்திருக்கிறார்.
சுரேஷ் மாரியின் இயக்கத்தில் ஊர்வசி, தினேஷ், மாறன் நடிப்பில் வெளிவந்து நேர்மறையான விமர்சனங்களை பெற்று வரும் திரைப்படமே ஜே பேபி. உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு குடும்ப பிரச்சினைகளை உணர்வு ரீதியாக கையாண்டு உறவுகளின் மகத்துவத்தை பதிவு செய்திருக்கிறது இத்திரைப்படம்.
அம்மாவான ஊர்வசி நடிப்பிலும் காமெடியிலும் தேர்ந்து நிற்கிறார். “மனித குணமே காயப்படுத்துவது தான். அதுவே சில நேரம் நல்லதும் செய்யும்”. என்று கூறி முடிக்கிறார் பேபி.
33 வருடங்களுக்குப் பின் குணா படத்தை கொண்டாட வைத்த மஞ்சுமல் பாய்ஸ்க்கு ஒரு சபாஷ் போட்டுக் கொள்ளலாம். குணா குகைக்குள் மாட்டிய நண்பனை தேடும் பயணம். சாதாரண கதையை கொஞ்சம் நகைச்சுவை கலந்து விறுவிறுப்புடன் கூறி 100 கோடி வசூலை வாரி குவித்து விட்டது மலையாளத்தின் இந்த மஞ்சுமல் பாய்ஸ்.
முழு சைத்தானாக மாறிய மாதவன்
பாலிவுட்டில் அஜய் தேவகன், ஜோதிகா, மாதவன் நடிப்பில் வெளிவந்த திகில் ஊட்டும் திரைப்படம் தான் சைத்தான். வழக்கமான பேய் கதையாக இல்லாமல் சற்று பின்னோக்கி சென்று பாட்டி காலத்து சூனியக்காரன் கதையை கையில் எடுத்து வெற்றி பெற்று விட்டது சைத்தான்.
“கடவுள் இல்லைன்னு யார் சொன்னா இருந்தா நல்லா இருக்கும் தானே சொன்னேன்” என்ற தசாவதாரம் கமலின் டயலாக் போல், ஆன்மீகத்தை வைத்து அரங்கேறிய டைம் பீரியட் கதை தான் வடக்குப்பட்டி ராமசாமி.
சந்தானம், மாறன், சேஷு, மொட்டை ராஜேந்திரன் என பலர் காமெடியுடன் சேர்ந்து வசூலிம் சக்கை போடு போட்டதுடன் நிழல்கள் ரவிக்கும் காமெடி வரும் என்பதை நிரூபித்து போனார்.