ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

சொந்த மகளை காப்பாற்ற 15 வருட கட்சிக்கு துரோகம் செய்த சரத்குமார்.. யார் கொடுத்த ஐடியா தெரியுமா?

Actor Sarathkumar: சரத்குமார் தான் இப்போது சமூக வலைத்தளங்களின் பரபரப்பு செய்தியாக இருக்கிறார். சமீபத்தில் அவர் பாஜக உடன் தன்னுடைய கட்சியை இணைத்தது சலசலப்பை ஏற்படுத்தியது. அவருடைய கட்சி தொண்டர்களுக்கும் இந்த முடிவு பிடிக்கவில்லை.

அதையும் அவர்கள் சோசியல் மீடியாவில் பதிவு செய்து வருகின்றனர். இப்படி 15 வருட கட்சியை சரத்குமார் முடிவுக்கு கொண்டு வருவதற்கு பின்னால் சில காரணங்களும் சொல்லப்பட்டு வருகிறது. அதாவது அவருடைய மகளை காப்பாற்ற தான் இந்த முடிவை அவர் எடுத்திருக்கிறார்.

சில வருடங்களுக்கு முன்பு வரை பாஜகவை திட்டிக் கொண்டிருந்த நாட்டாமை திடீரென அந்தர் பல்டி அடித்து விட்டார். அர்த்த ராத்திரியில் அண்ணாமலைக்கு போன் செய்து இதை உறுதிப்படுத்தி விட்டாராம். கட்சியில் வேறு யாரிடமும் அவர் இது பற்றி கலந்து ஆலோசிக்கவில்லை.

ராதிகா கொடுத்த ஐடியா

தன்னுடைய இரண்டாவது மனைவி ராதிகாவிடம் தான் கேட்டிருக்கிறார். ஏனென்றால் அவருடைய மகள் வரலட்சுமி ஒரு பிரச்சனையில் சிக்கியிருக்கிறார்.

அவரின் பர்சனல் அசிஸ்டெண்டாக இருந்த ஆதி லிங்கம் என்பவர் தற்போது ஆயுதம் மற்றும் சில கடத்தல் வழக்குகளில் மாட்டியிருக்கிறார்.

அதில் வரலட்சுமி மீது கூட கேஸ் ஃபைல் செய்திருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து சரத்குமாரிடமும் விசாரணை நடைபெற இருக்கிறது. இதில் இருந்து தப்பிப்பதற்காக தான் தன்னுடைய கட்சியை அவர் இணைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு ஐடியா கொடுத்தது கூட ராதிகா தான்.

அவர் பேச்சை கேட்டு நாட்டாமை இப்படி ஒரு முடிவு எடுத்திருக்கிறார். இதன் மூலம் அவருடைய புகழும் குறைந்து இருக்கிறது. மேலும் இதனால் கட்சி உறுப்பினர்கள் கூட பல பேர் வெளியேறி இருக்கிறார்கள்.

ஆக மொத்தம் அவர் சுய லாபத்திற்காக சொந்த கட்சியை அடகு வைத்து விட்டார் என அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

Trending News