Pandian Stores 2: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியலில், பாண்டியன் குடும்பத்தில் உள்ளவர்கள் பாசத்தை பாயாசமாக கொட்டுகிறார்கள். ஒரு பக்கம் பாண்டியனின் மூத்த மகனுக்கு கல்யாணம் நடக்காமல் தடைபட்டு கொண்டே இருக்கிறது.
அதனால் சோகத்தில் காலில் செருப்பு போடாமல் 50 நாளைக்கு நடந்தால் கழுத்தில் தாலி ஏறும் என்ற நம்பிக்கையில் ஒரு சபதத்தை போட்டு இருக்கிறார். இன்னொரு பக்கம் அப்பா என்னால தான் இந்த கஷ்டத்தை எல்லாம் அனுபவிக்கிறார் என்ற வேதனையில் பாண்டியனின் மூத்த மகன் சரவணன் ஒரு விபரீதமான முடிவை எடுத்து விட்டார்.
பாண்டியனின் மகன் எடுத்த முடிவு
அதாவது எனக்கு கல்யாணமே வேண்டாம். நான் சன்னியாசியாகவே இருந்து கொள்கிறேன் என்று சாமியாராக மாறிவிட்டார். இவரை இந்த மாதிரி பார்த்ததும் கோமதி அதிர்ச்சியில் அப்படியே மயக்கம் போட்டு விழுந்து விட்டார்.
இதை பார்த்ததும் சரவணன் ஒண்ணும் ஆகாது. யாரும் கவலைப்பட வேண்டாம் எல்லாம் சரியாகிவிடும் என்று சாமியார் போலவே பேச ஆரம்பித்து விட்டார். இதை எல்லாம் பார்த்த மீனா மற்றும் ராஜி இது ஒரு வேடிக்கை நிகழ்ச்சி மாதிரி சிரித்துக் கொள்கிறார்கள்.
ஆனால் பாண்டியன் வீட்டில் ஒவ்வொருவரும் ரணகளமாக இருக்கும் பொழுது அந்த ரணகளத்திலும் குதூகலம் காய்ந்து வருகிறார்கள் மருமகள். இதற்கிடையில் பாண்டியன் கோவிலுக்கு போயிட்டு வரும்போது காலில் முள்ளு குத்தியதால் அது ஒரு பெரிய விஷயமாக ஒவ்வொருவரும் ஓவர் ரியாக்ஷன் கொடுத்தார்கள்.
ஆனால் இதெல்லாம் ஒன்றுமே இல்லை என்பதற்கு ஏற்ப மீனா அதை சரி செய்து விட்டார். குடும்பத்தில் இருப்பவர்கள் பாசமாக இருக்கும் பொழுது பார்க்க நன்றாகத் தான் இருக்கிறது. ஆனால் அதே பாசம் ஓவராக கொட்டும் பொழுது பார்ப்பதற்கு ரொம்பவே போர் அடிக்கிறது.
இந்த விஷயங்களை எல்லாம் தாண்டி ராஜி மற்றும் கதிர்குள் இருக்கும் காதலையும், மீனா மற்றும் செந்திலின் பாசத்தையும் காட்டி அடுத்தடுத்து வித்தியாசமான கதைகளை கொண்டு வந்தால் இன்னும் பார்ப்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கும்.