சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

ஒரு நிமிடத்திற்கு 50 கோடி சம்பளம்.. நண்டு கொழுத்தால் வலையில் தங்காது நயன்

Nayanthara: ‘ பில்டப் விடுறமோ, பீலா விடுறமோ அதை இந்த உலகம் நம்பனும், உத்து பாக்கணும்’. வடிவேலு சொன்ன இந்த தாரக மந்திரத்தை சரியாக பயன்படுத்துவது நயன்தாரா தான். சினிமாவுக்குத் தேவையான அத்தனை ராஜதந்திரங்களையும் கரைத்துக் குடித்திருக்கிறார் நம்ம லேடி சூப்பர் ஸ்டார்.

கை நிறைய பட வாய்ப்புகளை வைத்துக்கொண்டு, நிற்க நேரமில்லாமல் ஓடுவது ஒருவகை. எந்த பட வாய்ப்புமே இல்லாமல் இருந்தாலும், பிஸியாகவே இருப்பது போல் காட்டிக் கொள்வது இன்னொரு வகை. நம்ம தலைவி இதில் இரண்டாவது வகை தான். அவ்வளவு பில்டப் காட்டி வருகிறார்.

நயனுக்கு கல்யாணத்திற்கு பிறகு வாய்ப்புகள் எதுவுமே இல்லை. பாலிவுட்டில் வாய்ப்புக் கதவு திறந்து அதிர்ஷ்ட காத்து வீசி கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் இன்று வரை எந்த ஒரு படத்தின் அப்டேட்டும் வெளியாகவில்லை. எல்லாம் சுத்தி இருக்கிறவங்க கிளப்பி விடும் புரளிதான்.

காத்து இருக்கும்போதே தூற்றிக்கொள்ள வேண்டும் என்று பழமொழி இருக்கு. அதை மாதிரி தான் இந்த புரளி இருக்கும் போதே சம்பாதிச்சிடலாம்னு முடிவு பண்ணிட்டாங்க நயன். ஒரு பக்கம் சம்பாத்தியம், மறுபக்கம் பணத்தை பல மடங்கு ஆக்க பிசினஸ் என வரிந்து கட்டிக்கொண்டு ரெடியாகிவிட்டார்.

தென்னிந்தியாவில் முன்னணி ஹீரோயினாக இருந்தபோது நயன் ஒரு சில விளம்பர படங்களில் நடித்தார். அதில் ரொம்ப குறிப்பிட்டு சொல்ல வேண்டியது டாட்டா ஸ்கை டிஷ் விளம்பரம். இப்போது ஸ்லைஸ் கூல்டிரிங்ஸ் விளம்பரத்தில் நடித்திருக்கிறார். இதுவரை இந்த விளம்பரத்திற்கு ஆஸ்தான நாயகியாக இருந்தவர் கத்ரீனா கைஃப்.

நயன்தாரா இந்த இரண்டு விளம்பரங்களில் நடிப்பதற்கு 50 கோடி சம்பளமாக வாங்குகிறாராம். படம் நடிப்பதற்கே இவருக்கு பத்திலிருந்து 12 கோடி தான் சம்பளம். ஆனால் விளம்பரத்தில் 50 கோடி சம்பளம் வாங்குவதாக செய்தி வெளியாகியிருக்கிறது.

பில்டப் விடும் நயன்தாரா

இந்த மாதிரி செய்திகள் வெளி வருவது எல்லாமே நயன்தாராவின் ராஜதந்திரம் தான். இப்படி விளம்பரங்களில் நடிப்பதற்கே 50 கோடி சம்பளம் வாங்குகிறாரா என்று எல்லோருமே வாயை பிளப்பார்கள். அப்ப கண்டிப்பா நயன்தாரா மார்க்கெட் இருக்கிற நடிகைதான்னு தயாரிப்பாளர்களும் வீட்டு வாசலில் வந்து நிற்பார்கள்.

பழைய பவுசு எல்லாம் குறைஞ்சு போச்சுன்னு நயன்தாராக்கு நல்லா தெரிஞ்சிருச்சு. இனி இப்படி கிளப்பி விட்டா தான் பொழப்பு ஓடும்னு கண்டுபிடிச்சிட்டாங்க. அதனால் தான் இப்படி கோடிக்கணக்கில் உருட்டப்படுகிறது. அது சரி, நண்டு கொழுத்தா வலையில் தாங்காது என்று சும்மாவா சொன்னாங்க.

Trending News