சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

எம்ஜிஆரை தவறாக பேசி கதி கலங்கி போன பத்திரிக்கை.. கடைசி வரை கந்தலாக்கி பணிய வைத்த தலைவர்..!

எம்ஜிஆரை தமிழக மக்கள் இன்றளவும் தெய்வமாக நினைத்து வாழ்ந்து வருகிறார்கள். அந்த அளவிற்கு மக்களுக்கு நல்லது செய்தவர். அதேபோல் நல்லதை செய்த அளவிற்கு கெட்டதையும் செய்துள்ளார். அதாவது அவரை பகைத்துக் கொண்டவர்களை அவ்வளவு எளிதில் விட்டு விட மாட்டார்.

தன்னை எதிர்த்தவர்கள் தன்னுடன் நடித்த நடிகைகளுடன் பழகுபவர்கள் யாராக இருந்தாலும் அவரது தோட்டத்தில் கட்டி வைத்து அடிப்பார். இல்லை வேறு மாதிரியாக யாரு அவர்களுக்கு தண்டனையை வழங்கி விடுவார். அந்த லிஸ்டில் பல நடிகர்கள் இருந்துள்ளனர் ரஜினி பெயர் கூட அதில் வந்துள்ளது.

அதே போல் எம்ஜிஆர் முதல்வர் ஆவதற்கு முன்பு சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த சமயத்தில் இவரைப் பற்றி பல பேர் நல்லவிதமாக பேசினாலும் இவரை வளர விடாமல் தடுக்க பல பத்திரிகையில் தவறாக எழுதி வந்தனர். அதில் முக்கியமான பத்திரிக்கை தினத்தந்தி இவரை கடுமையாக சாடி வந்தனர்.

எம்ஜிஆர் ஒரு மலையாளி, வயதான தோற்றத்தில் இருக்கக்கூடியவர். வயதான தோற்றத்துடன் இருக்கும் மாதிரி பல கார்ட்டூன் வரைந்து வெளியிட்டு அசிங்கப்படுத்தியுள்ளனர். இதனால் தன் பாணியில் தினத்தந்திக்கு பதில் சொல்லியுள்ளார்.

பத்திரிக்கையை காலில் விழ வைத்த சம்பவம்

சந்திரோதயம் படத்தில் எம் ஆர் ராதாவை தின கவர்ச்சி என்ற பத்திரிக்கை நடத்துபவராக நடிக்க வைத்து. அவரை வசை பாடுவது போல் தினத்தந்தி பத்திரிக்கையை திட்டி பேசியுள்ளார். பெண்களின் கவர்ச்சியை வைத்து பத்திரிகை நடத்தி வாழ்ற நீயெல்லாம் என்ன பத்தி தப்பா பேசுறியா என காட்சியை வைத்து அசிங்கப்படுத்தி உள்ளார்.

அதேபோல் தான் நடிக்கும் படங்கள் தன்னுடன் நடிக்கும் நடிகைகளின் படங்கள் எதையும் தினத்தந்திக்கு கொடுக்கக் கூடாது என தயாரிப்பாளர்களுக்கு கட்டளையும் விரித்துள்ளார். உச்சகட்டமாக அண்ணா முதல்வராகும் பொழுது அமைச்சர்களின் பட்டியலை எம்ஜிஆரின் பொறுப்புக்கு கொடுத்துள்ளார்.

அப்போது தினத்தந்தி நிறுவனர் சீபா ஆதித்தனார் பெயரை தூக்கிவிட்டார் இதனால் அமைச்சராகும் வாய்ப்பை இழந்தார். ஒரு கட்டத்தில் இனிமேல் எம்ஜிஆரை எதிர்த்து பத்திரிக்கை நடத்த முடியாது என்று தெரிந்து அவரிடம் மன்னிப்பு கேட்டு. இன்று வரை எம்ஜிஆரை தவறாக எழுதியது இல்லாத அளவிற்கு மாறிவிட்டனர் தினத்தந்தி பத்திரிக்கை.

Trending News