Ethirneechal promo: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், குணசேகரனை நம்பி கரிகாலன் இதுவரை முட்டாள்தனமாக நம்பி இருந்தார். அதனால் தான் ஆதிரை இல்லைன்னாலும் தர்ஷினி கல்யாணம் பண்ணுவதற்கு தலையாட்டி இருந்தார்.
இதுக்கு எல்லாத்துக்கும் காரணம் குணசேகரனிடம் இருக்கும் சொத்தை ஆட்டைய போடலாம் என்று ஜான்சி ராணியும் கரிகாலனும் கணக்கு போட்டு வைத்தார்கள்.
ஆனால் தற்போது எல்லாத்துக்கும் மொத்தமாக ஆப்பு வைக்கும் விதமாக குணசேகரன் அவருடைய சுயரூபத்தை காட்டி விட்டார். அதாவது குணசேகரன் மாமா எப்படியும் தர்ஷினியை எனக்கு கல்யாணம் பண்ணி வைத்து விடுவார் என்ற நம்பிக்கையில் அந்த வீட்டில் அடியும் மிதியும் வாங்கிக் கொண்டிருந்தார் கரிகாலன்.
இதனைத் தொடர்ந்து கரிகாலனின் பேச்சு கொஞ்சம் ஓவராகவே இருந்தது. அத்துடன் மொத்த குடும்பமும் ஒன்றாக இருக்கும் பொழுது கரிகாலன் தர்ஷினியை கொஞ்சம் அசிங்கமாக பேசிவிட்டார். இதை பொறுத்துக் கொள்ள முடியாத கதிர் வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுன்னு களத்தில் இறங்கி விட்டார்.
இதனை வேடிக்கை பார்த்திருந்த குணசேகரன் இனிமேலும் கரிகாலன் நமக்குத் தேவையில்லை என்று அருவாமனையை கரிகாலன் கழுத்தில் வைத்து விட்டார். அத்துடன் கதிர் சொன்னபடி வீட்டை விட்டு வெளியே போ என்று குணசேகரனும் சொல்லிவிட்டார்.
இதனால் கதிர் கரிகாலனை அடித்து வெளியே தள்ளி விட்டார். அதற்கு கரிகாலன் யோ மாமா இனிமேல் தர்ஷினியை கல்யாணம் பண்ண சொல்லி வற்புறுத்தினாலும் காலில் விழுந்து கெஞ்சினாலும் அவள் எனக்கு வேண்டாம் என்று கரிகாலன் கோபமாக சொல்லிவிட்டார்.
எப்படியோ கரிகாலன் சாப்டர் க்ளோஸ் ஆகிவிட்டது.
ஆனால் இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த உம்மையா இதுதான் சான்ஸ் என்று தர்ஷினியை தன் வீட்டு மருமகளாக ஆக்கிக் கொள்ளலாம் என்று முடிவு பண்ணி விட்டார்.
அதற்காக குணசேகரனிடம் நான் முழு மனதுடன் தர்ஷணியை மருமகளாக ஏற்றுக் கொள்கிறேன் சம்மதம் பண்ணிக் கொள்ளலாமா என்று கேட்டுவிட்டார்.
தர்ஷினியின் புத்தியை தெளிய வைக்க வரும் ஜீவானந்தம்
எப்படியோ குணசேகரன் கண்டிப்பாக மறுபடியும் இந்த மாதிரி ஒரு டீலிங் மூலம் வியாபாரம் பேசலாம் என்று ஓகே சொல்லிவிடுவார். ஆனால் இதை எந்த காரணத்தை கொண்டும் நடத்த விட மாட்டேன் என்று ஈஸ்வரி வழக்கம்போல் வாய் சவடால் விடுகிறார்.
இதனைத் தொடர்ந்து தர்ஷினி இன்னும் புத்தி பேதலித்து போய் தான் இருக்கிறார். இவர் குணமாக வேண்டும் என்றால் ஜீவானந்தம் ஹீரோ மாதிரி வந்து தர்ஷினி என்று கூப்பிட்டதும் அப்பா என்று ஓடி வந்த பிறகுதான் தர்ஷினி முழுமையாக குணமாவது போல் கதை ஆரம்பமாகப் போகிறது.