கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கும், நடிகர் அஜித்துக்கும் உள்ள ஒரே எண்ணங்கள் பற்றிய பேச்சு தான் இப்பொழுது வைரலாகி கொண்டிருக்கிறது. இரண்டு பேரும் கடின உழைப்பாளி. அப்படி கோலி மைக் பிடித்து என்ன பேசினார்? என்ன ஒற்றுமை இருக்கிறது? என்று இப்பொழுது பார்க்கலாம்.
விராட் கோலி ஆரம்பத்தில் நன்றாக விளையாடினாலும் நடுவில் ஏற்பட்ட சறுக்கல்கள் அவரை சோர்வடைய வைத்தது. அதன் பின் அவர் பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோவை உதாரணமாக வைத்து அவருடைய பழக்கவழக்கங்களை கடின உழைப்பை கோலியும் பின்பற்றினார்.
அதன் பலனாக அவருடைய உடற்பயிற்சி, விளையாட்டு என அனைத்திலும் முன்னேற தொடங்கினார். இதேபோன்றுதான் நடிகர் அஜித்தும் பல சறுக்கல்களை சந்தித்து கடின உழைப்பால் முன்னேறினார்.
இந்த புகழ்ச்சியே வேண்டாம்
அதுமட்டுமில்லாமல் தற்பெருமை, புகழ்ச்சி போன்றவற்றை விட்டு ஒதுங்கியே இருக்கிறார். அல்டிமேட் ஸ்டார், நாளைய சூப்பர் ஸ்டார், தல போன்ற பட்டங்கள் எதுவும் எனக்கு வேண்டாம் என்று அஜித் ரசிகர்களிடம் அன்பாக கூறினார்.
அந்த பார்முலாவை தான் தற்பொழுது விராட் கோலி கூறுகிறார். தன்னை அனைவரும் கிங் என்று அழைப்பதை விரும்பாமல் விராட் கோலி என்றே அழையுங்கள் என்று கூறி மைக் பிடித்து மேடையிலேயே கூறினார்.
இதனை அஜித் ரசிகர்களும், விராட் கோலி ரசிகர்களும் கலப்படம் இல்லாத உண்மையான வீரர்கள் இவர்கள்தான் என புகழ்ந்து வருகிறார்கள்.
சில பல பேர் பட்டம், பதவி என அனைத்தையும் நோக்கி செல்ல இவர்கள் இரண்டு பேரும் அவருடைய ரசிகர்களுக்கு ஒரு ரோல் மாடலாக இருக்கிறார்கள். இதையே மற்றவர்களும் பின்பற்றினால் சமுதாயத்திற்கு ரொம்ப நல்லது.