ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

கிளைமாக்ஸ் ட்விஸ்டில் மிரட்டிய 5 படங்கள்.. சீட் நுனியில் உட்கார வைத்த ‘பாபநாசம்’ சுயம்புலிங்கம்

5 twisted climax movies: ஒரு படத்த பார்க்க ஆரம்பிச்ச கால் மணி நேரத்திலேயே அதோட கிளைமாக்ஸ் இதுதான்னு கணிச்சிட முடியும். அதைத் தாண்டிய சுவாரஸ்யம் தான் அந்தப் படத்தின் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது. ஒரு சில படங்கள் இதில் வேற ரகமாக இருக்கும். அப்பாடா, படம் முடிய போகுதுனு அக்கடான்னு சீட்ல உக்காந்து இருக்கும் பொழுது, அதுல எதிர்பாக்காத டுவிஸ்ட்ட வச்சு, சீட்டு நுனிக்கு கொண்டு வந்துடும். அப்படி ஹாயா உக்காந்து படம் பாத்துட்டு இருந்த நம்மள மண்டைல ஓங்கி அடுச்ச மாறி டிவிஸ்ட் வச்ச 5 படங்களை பத்தி பார்க்கலாம்.

கைதி: கைதி படத்தில் லோகேஷ் செய்த சம்பவம் தமிழ் சினிமா ரசிகர்களை மிரள செய்தது. ஜெயிலில் இருந்து வெளிவந்த டில்லி துப்பாக்கியை வைத்து ரவுடிகளை சுட்டு தள்ளிய போது அள்ளு விட்டு போனது. கான்ஸ்டபிள் நெப்போலியனின் காட்சி எல்லாம் இணைக்கு பார்த்தாலும் புல்லரிக்கும். எவனோ ஒருத்தன் இல்ல, அவன் பேரு டில்லி ன்ற வசனத்தோட படம் முடியும் போது என்னடா நடக்குது இங்கன்னு தான் தோணிச்சு.

சீட் நுனியில் உட்கார வைத்த சுயம்புலிங்கம்

பாபநாசம்: இன்று வரை த்ரிஷ்யம் கிளைமேக்சில் மோகன் லால் நடிப்பு சிறப்பா, இல்லை பாபநாசம் கிளைமேக்சில் கமல் நடிப்பு சிறப்பா என பெரிய வாதமே நடந்து கொண்டு இருக்கிறது. என்ன தான் மலையாள படத்தின் மறு ஆக்கம் என்றாலும், சீனுக்கு சீன் உலகநாயகனின் டச் இருந்து கொண்டே இருந்தது. பொணத்த எங்க பொதச்சோம்னு சுயம்புலிங்கத்தோட சின்ன பொண்ணு போலீஸ் கிட்ட சொல்லி, அந்த எடத்துல விசாரணை நடக்கும் போது படம் பாக்குற நமக்கே வௌ வெளத்து போயிடும். கடைசி சீன்ல அந்த பையன பொதச்ச இடத்த சுயம்புலிங்கம் நினைச்சு பாப்பாரு. இப்போ டிவி-ல அந்த காட்சி வந்தாலும் எழுந்து நின்னு கை தட்டணும் போல இருக்கும்.

பிரேமம்: நிவின் பாலி நடிப்பில் இந்த படத்தை பார்க்கும் போது காதலில் உருகாத ஆளே இல்லை என்று சொல்லலாம். பள்ளி பருவ காதல், கல்லூரி காதல் என அத்தனையும் கண் முன் வந்து போகும். என்னடா இது காதலியின் தங்கச்சிய கல்யாணம் பண்ணுறான்னு கொஞ்சம் ஜெர்க் இருக்கும் நேரத்தில், சாய் பல்லவி உள்ள வந்து மொத்த காட்சியையும் மாற்றி இருப்பார்.

அருவி: ஒரு சில படங்களை பார்த்து, முடித்த பிறகு மனசு முழுக்க ஒரு மாதிரி கனமா இருக்கும். அப்படி ஒரு படம் தான் அருவி. அந்த பொண்ணுக்கு எயிட்ஸ் நோய் பரவின விதமே கலங்கடிச்சு இருக்கும். அது பத்தாதுன்னு நோயின் தாக்கத்தால் உடல் மெலிஞ்சு இருக்கும் அருவியை பார்க்கும் போது அழுகை தான் வரும். இறுதியில் அருவியின் கள்ளமில்லா சிரிப்பு நெருடலை தான் கொடுக்கும்.

சூப்பர் டீலக்ஸ்: ஷில்பா – ராசுக்குட்டி, வேம்பு – முகில், லீலா – சூரி வாழ்க்கை கதையை மையமாக கொண்ட இந்த கதை, ஒரு புள்ளியில் எல்லாரையும் ஒன்றாக சேர்த்த விதமே அற்புதம். அதிலும் ராசுக்குட்டி ஷில்பாவிடம், நீ ஆம்பளையா இது, பொம்பளையா இது எனக்கு அப்பாவா இரு போதும்னு சொல்லும் போது கண் கலங்கி விடும்.

Trending News