Abraham Ozler Movie Review: க்ரைம் திரில்லர் கதைகள் என்றாலே மலையாள படங்கள் தான் ஞாபகத்துக்கு வரும் அந்த அளவுக்கு பல விறுவிறுப்பான படங்கள் வெளியாகி சக்கை போடு போட்டு வருகிறது.
அப்படி நொடிக்கு நொடி சுவாரஸ்யம் கலந்த படம் தான் ஆபிரகாம் ஓஸ்லர். மிதுன் மானுவல் தாமஸ் இயக்கத்தில் ஜெயராம், அனூப் மேனேன் ஆகியோருடன் மம்முட்டி கேமியா ரோலில் மிரட்டியுள்ளார்.
மனைவி, மகளை இழந்து மன உளைச்சலில் இருக்கும் ஜெயராமிடம் ஒரு கொலை வழக்கு விசாரணைக்கு வருகிறது. அதை விசாரித்துக் கொண்டிருக்கும் போதே அடுத்தடுத்த கொலைகளும் நட க்கிறது.
காவல்துறைக்கு பெரும் சவாலாக இருக்கும் இந்த கொலைகளை புத்திசாலித்தனமாக ஜெயராம் கையாளுகிறார். ஆனாலும் கொலையாளி அவருக்கு போக்கு காட்டிக் கொண்டிருக்கிறார்.
ஜெயராமுக்கு கண் கட்டி வித்தை காட்டும் மம்முட்டி
இனிமேலும் இந்த கொலை நடக்கக் கூடாது என முயற்சி எடுக்கும் ஜெயராம் அதில் ஜெயித்தாரா? கொலையாளி யார்? அதன் பின்னனி என்ன? போன்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறது இப்படம்.
வழக்கமான கதை தான் என்றாலும் நவீன முறையில் நடக்கும் கொலைகள் ட்விஸ்ட் வைக்கிறது. அதற்கு பலம் சேர்ப்பது போல் ஒளிப்பதிவும் பின்னணி இசையும் கச்சிதமாக பொருந்தி போகிறது.
திரில்லர் படங்களுக்கே உரிய அம்சங்களுடன் நகரும் கதையில் மம்முட்டியின் என்ட்ரி வேற லெவல். அதைத்தொடர்ந்து ஜெயராமுக்கும் இவருக்கும் நடக்கும் இடையேயான காட்சிகளும் கூடுதல் சிறப்பு.
ஆனால் கிளைமாக்சில் வரும் ட்விஸ்ட் தான் யாரும் எதிர்பாராதது. ஆக மொத்தம் ஹீரோ ஹீரோவே கிடையாது. வில்லன் வில்லனே கிடையாது என சொல்ல வந்ததை சொல்லி இருக்கிறார் இயக்குனர்.
இந்த வருடத் தொடக்கத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற இப்படம் தற்போது டிஸ்னி ஹாட் ஸ்டாரில் வெளியாகியுள்ளது. தியேட்டரில் படத்தை மிஸ் செய்தவர்கள் ஓடிடியில் மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய படம் தான் இது.
சினிமா பேட்டை ரேட்டிங்: 3 / 5