சனிக்கிழமை, நவம்பர் 23, 2024

அப்பாக்கு செய்த துரோகத்தை மறைக்க பிரபாகரனுக்கு செய்யப் போகும் நன்றி கடன்.. வடிவேலு எடுக்கும் அஸ்திரம்

Captain Vijayakanth: பத்து வருஷமா வெளியில எங்கேயும் தலை காட்டாம வீட்டுக்குள்ளேயே முடங்கி இருந்தாரு நடிகர் வடிவேலு. என்றைக்கு விஜயகாந்த் பத்தி தப்பா பேச ஆரம்பிச்சாரோ அன்னைக்கே அவர் நாக்கில் சனி உக்காந்துருச்சு. எந்த ஒரு பட வாய்ப்பு இல்லாம மனுஷன் எங்க இருக்காரு என்ற தடையமே இல்லாமல் இவ்வளவு நாள் இருந்தாரு.

வடிவேலுவை மறுபடியும் மக்களிடம் கொண்டு வந்தது மாமன்னன் படம் தான். இவருக்குள்ள இப்படி ஒரு நடிகனா என ஒட்டுமொத்த ரசிகர்களும் தலையில் தூக்கி வைத்து கொண்டாட ஆரம்பித்தார்கள். ஆனால் கர்மா வடிவேலுவை விடுவதாய் இல்லை.

கேப்டன் விஜயகாந்தின் மரணம் வடிவேலுவுக்கு ஒரு பெரிய அடியாய் அமைந்துவிட்டது. வடிவேலு விஜயகாந்த் இறுதி அஞ்சலிக்கு போகவில்லை. அது மட்டும் இல்லாமல் அவர் கேப்டனை பற்றி பேசிய பழைய வீடியோக்கள் எல்லாம் வைரலாக ஆரம்பித்தது.

கேப்டன் இறந்து ஒரு சில வாரங்களுக்கு வடிவேலு வீட்டை விட்டுக் கூட வெளியில் போக முடியாத ஒரு நிலைமை. மாமன்னன் படத்திற்கு பிறகு மீண்டும் சினிமாவில் கொடிகட்டி பறந்து விடலாம் என்று நினைத்த வடிவேலுவின் கனவில் மண்தான் விழுந்தது. இருந்தாலும் அப்பப்போ மீடியாக்களே சந்திச்சு பேசிகிட்டு இருக்கிறாரு.

இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் தான் நாடாளுமன்றத் தேர்தல் பரபரப்பு ஆரம்பித்து இருக்கிறது. கடந்த 2011 ஆம் வருட தேர்தலில் வடிவேலு டிஎம்கே கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் அவர் தேர்தல் களத்தில் இறங்கவில்லை. ஆனால் இந்த முறை பிரச்சாரம் செய்தே ஆக வேண்டிய நிலைமை தான்.

ஏன்னா மாமன்னன் படத்துல வடிவேலு நடிக்கட்டும்னு வாய்ப்பு கொடுத்ததே உதயநிதி ஸ்டாலின் தான். விக்ரம் படத்தை தயாரிச்சு கமலஹாசனையே தன்னுடைய கட்சியாளருக்கு பிரச்சாரம் செய்து வைக்க ஆரம்பித்து விட்டார் உதயநிதி.

அப்படி இருக்கும்போது வடிவேலு எல்லாம் எம்மாத்திரம். பிரச்சாரத்திற்கு போங்கண்ணா போய் தான் ஆகணும். திமுகவை எதிர்த்து போட்டியிடும் பாஜக மற்றும் அதிமுக கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களை பற்றி விமர்சனம் செய்தே ஆக வேண்டிய நிலைமை.

வடிவேலு எடுத்திருக்கும் முடிவு

இப்போ அதிமுக கூட்டணியில விருதுநகர் தொகுதியில கேப்டன் மகன் வேட்பாளரா நிற்கிறார். விருதுநகர் தொகுதிக்கு போனா வடிவேலு கண்டிப்பா விஜய பிரபாகரனை விமர்சனம் செய்து பேசியே ஆக வேண்டும். இதுல தான் வடிவேலு தன்னுடைய நன்றி கடனை காட்டி இருக்காரு.

அதாவது திமுக கட்சிக்கு எல்லா தொகுதியிலும் பிரச்சாரம் செய்கிறேன் என்று உறுதி அளித்த வடிவேலு விருதுநகர் தொகுதிக்கு போக மாட்டேன் என்று சொல்லிட்டாரு. கேப்டனால் வடிவேலு எவ்வளவோ பலன் பெற்றிருக்கிறார். ஆனால் கடைசி நேரத்தில் அவரை தவறாக பேசி தமிழக மக்களின் வெறுப்பை தான் சம்பாதித்தார்.

ஆனா இப்போ விருதுநகர் தொகுதிக்கு போனா விஜய பிரபாகரனை பற்றி பேச வேண்டியது வரும் என அந்த தொகுதியை ஒதுக்கி விட்டார் வடிவேலு விஜயகாந்துக்கு நன்றி கடன் செய்யும் விதமாக வைகைப்புயல் இந்த முடிவை எடுத்திருக்கிறார்.

- Advertisement -spot_img

Trending News