ரஜினி கமலுடன் நடித்து பெயரைக் கெடுத்துக் கொண்ட நடிகர்.. விஜய்யின் மாஸ்டருக்கு இப்படி ஒரு நிலைமையா!

An actor who spoil his name by acting with Rajini Kamal: திரைத் துறையில் பல திறமைகள் இருந்தும்  சரியான வாய்ப்பு அமையாது போகவே காலத்தின் கொடூரத்தால் பல திறமையாளர்கள் மறைக்கப்பட்டனர் என்றே சொல்லலாம்.

90ஸ் களின் முற்பகுதியில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி மற்றும் கமலுடன் இணைந்து நடித்த போதும் அழுத்தமான கதாபாத்திரங்கள் அமையாத காரணத்தினால் ஜொலிக்க முடியாமல் போனவர் தான் கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹுசைனி.

கல்லூரி பருவத்தில் தான் கலந்து கொண்ட அனைத்து போட்டிகளிலும் முதல் பரிசை வென்றதால் முதல்வரின் ஊக்கத்தில் திரைத்துறைக்கு அடி எடுத்து வைத்தார் ஷிகான்.

1987இல் புன்னகை மன்னன் திரைப்படத்தில் சிங்கள பெண்ணான ரேவதியை மிரட்டும் இலங்கை தமிழனாக நடித்திருந்தார் ஷிகான். இதன்பின் விஜயகாந்தின் மூங்கில் கோட்டை திரைப்படத்திலும் நடித்திருந்தார்

அது மட்டும் இன்றி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பிளட் ஸ்டோன் என்கின்ற ஹாலிவுட்  திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்திலும், வேலைக்காரன் திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

சிற்பம் செய்தல், படம் வரைதல் என பல திறமைகளை தன்னுள் வைத்திருக்கும் இந்த கராத்தே மாஸ்டருக்கு சமையலும் அத்துபடி தான். 

சின்னத்திரை தொலைக்காட்சிகளில் கராத்தே ஸ்டைலில் பாத்திரங்களை போட்டு உருட்டி சமையல் என்கின்ற பெயரில் அதகளப்படுத்தி விடுவார். 

தற்காப்பு கலை கற்றுக் கொள்ள விரும்புபவர்களுக்கு உதவ, பயிற்சி பள்ளியையும் ஆரம்பித்து கராத்தே பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார். 

பத்ரி படத்தில் விஜய்க்கு மாஸ்டராக நடித்த ஷிகான் ஹுசைனி 

அதுமட்டுமின்றி 2001 ஆண்டு விஜய் நடிப்பில் வெளிவந்த பத்ரி திரைப்படத்தில் விஜய்க்கு பயிற்சியாளராக ஒரு பாடலிலும், கிளைமாக்ஸ் காட்சிகளிலும் நடித்திருந்தார்.

முன்னாள் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியான ஷிகான் ஹுசைனி அவருக்கு ரத்தத்தினால் படங்கள் வரைவது, உறைந்த உதிரத்தை வைத்து சிலை செய்வது என பல சாகசங்கள் செய்துள்ளார். 

தமிழ் சினிமாவில் பல படங்களுக்கு பாதுகாப்பு பணியில் ஒருங்கிணைப்பாளராக பணி புரிந்துள்ளார் இந்த மாஸ்டர்.

தன்னை தானே மோசமான நடிகர் என்று கூறிக் கொள்ளும் இவர், பேட்டி ஒன்றில் படத்தின் சண்டைக் காட்சிகளில் அடுத்தவர்களை அடிப்பதை விரும்பாமல், சினிமாவில் இருந்து வெளியேறியதாக கூறியுள்ளார். 

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →