வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

புது பிசினஸ் தொடங்கிய நடிகர் விஷால்.. ஆனாலும் தலைவனுக்கு ரொம்ப தில்லு தான்

Actor Vishal: பழைய ரஜினி படங்கள்ல தலைவர் ஒரே பாட்டுல பணக்காரனாயிடுவார். அந்த மோட்டிவேஷன தான் இப்போ விஷால் கையில் எடுத்திருக்கிறார் போல. செல்லமே படத்துல இவரு நடிக்கும் போது யார் இந்த பையன், கொஞ்சம் ஓவர் ஆக்ட் பண்றானே நெனச்சி இருப்போம்.

அதுக்கப்புறம் அடுத்தடுத்து சண்டக்கோழி, திமிரு போன்ற படங்களில் நடித்து நானும் மதுரைக்காரன் தான் டா என தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். அவ்வளவுதான் தமிழ் சினிமாவுக்கு அடுத்த ஆக்சன் கிங் வந்தாச்சு என சண்டை காட்சிகளை விரும்பும் ரசிகர்கள் இவரை கொண்டாட தொடங்கினர்.

ஆறடி உயரம், அளவெடுத்த உடம்பு என சண்டைக் காட்சிகளுக்காகவே உருவாக்கப்பட்ட நடிகராகவும் இவர் இருந்தார். நல்லா போய்க்கிட்டு இருக்கும்போது திடீர்னு அரசியல், திடீர்னு நடிகர் சங்கம் என அவரே குழப்பிக் கொண்டார்.

அதன் பின்னர் சொந்தமாக படங்கள் தயாரிக்கவும் ஆரம்பித்தார். பெரும்பாலான படங்கள் கோட்டை விட்டிருந்தாலும், ஒரு சில படங்கள் விஷாலுக்கு பெரிய வெற்றியை கொடுத்தது. தொடர் தோல்விகளை சந்தித்து வந்த விஷாலுக்கு மார்க் ஆண்டனி படம் பெரிய ஹிட் ஆக அமைந்தது.

இருந்தாலும் படத்தின் வெற்றிக்கான கிரெடிட்ஸ் என்பது முழுக்க எஸ் ஜே சூர்யாவுக்கு தான். இதனால் அடுத்து தன்னை ஒரு வெற்றி ஹீரோவாக நிரூபித்துக் கொள்ளும் நிர்பந்தத்தில் தான் விஷால் இருக்கிறார். விஷாலுக்கு தாமிரபரணி என்ற சூப்பர் ஹிட் படத்தை ஹரி கொடுத்திருந்தார்.

தற்போது பல வருடங்களுக்கு பிறகு இந்த இரண்டு பேரின் கூட்டணி ரத்னம் படத்தில் இணைந்து இருக்கிறது. படத்தின் மூலம் ஒரு ஹீரோவாக விஷால் வெற்றியை எதிர்பார்ப்பதை விட, விநியோகஸ்தராகவும் தன்னுடைய புதிய தொழிலை தொடங்கி இருக்கிறார்.

புது பிசினஸ் தொடங்கிய விஷால்

ஹரி இயக்கத்தில் விஷால் நடித்து வரும் ரத்னம் படத்தில் தமிழ்நாடு மற்றும் ஆந்திரா விநியோகஸ்த உரிமையை விஷால் வாங்கி இருக்கிறார். சரி விநியோகஸ்தர் ஆயாச்சும் , அந்த துப்பறிவாளன் பார்ட் 2 என்ன ஆச்சு என எல்லாருக்கும் தோணும்.

அட இப்போ தான விநியோகஸ்தராகி இருக்கிறார். இனி ரத்தினம் படம் ரிலீஸ் ஆகி, அதில் எடுக்கின்ற லாபத்தை வைத்து தான் துப்பறிவாளன் 2 வேலைகளை ஆரம்பிக்க இருக்கிறார். புதிய முயற்சியை எடுக்கும் விஷாலுக்கு பெரிய வாழ்த்துக்களை சொல்லிக் கொள்வோம் அவ்வளவுதான்.

Trending News