Actor Dhanush: தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் இளையராஜாவின் பயோபிக் பற்றிய பேச்சு தான் இப்போது வைரலாகி வருகிறது. சமீபத்தில் இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.
அந்த விழாவில் இளையராஜா, கமல், தனுஷ் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். அதனாலேயே அது மீடியாக்களில் அதிக கவனம் பெற்றது.
மேலும் அவர் வாழ்க்கையில் நடந்த அத்தனை சம்பவங்களும் காட்டப்படுமா என்ற கேள்வியும் இப்போது எழுந்துள்ளது. இந்நிலையில் இசைஞானி பட குழுவுக்கு முக்கிய ஆர்டர் ஒன்றை போட்டுள்ளாராம்.
அதாவது இந்த பயோபிக்கில் 4 பிரபலங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக உள்ளனர். அவர்கள் இல்லை என்றால் இப்படம் நிச்சயம் முழுமை அடையாது.
இளையராஜா போட்ட கண்டிஷன்
அதனாலேயே இளையராஜா அந்த 4 பேர் மாதிரியே உள்ள நபர்கள் தான் நடிக்க வேண்டும் என்று கூறிவிட்டாராம். அந்த வகையில் பாரதிராஜா, வைரமுத்து, கங்கை அமரன், வைரமுத்துவின் சகோதரர் பாவலர் வரதராஜன் ஆகியோர் தான் அந்த பிரபலங்கள்.
இவர்களுடன் இளையராஜாவுக்கு நல்ல நட்பும் இருந்திருக்கிறது. அதே சமயம் சர்ச்சைகளும் இருந்திருக்கிறது. அதனாலேயே அச்சு அசல் ஜெராக்ஸ் மாதிரி இருப்பவர்கள் நடிக்க வேண்டும் என அவர் ஆசைப்பட்டுள்ளார்.
இதனால் இயக்குனர் தற்போது விழி பிதுங்கி போயிருக்கிறாராம். தனுஷும் செய்வதறியாது யோசனையில் ஆழ்ந்துள்ளார். எப்படியும் அதே போல் இருப்பவர்களை கண்டுபிடித்து தான் ஆக வேண்டும்.
அப்போதுதான் இந்த பயோபிக் முழுமையடையும். இளையராஜாவும் மனம் குளிர்ந்து போவார். அதுதான் தனுஷின் எண்ணமாகவும் உள்ளது.