திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

தேவயானியை கலெக்டர் ஆக்கியது போல், ராதிகாவை MP ஆக்குவேன்.. காமெடி பீஸ் ஆகும் சரத்குமார்

Actor Sarathkumar: ‘நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டி பாக்குது” என்ற பாட்டு 90ஸ் கிட்ஸ்களுக்கு மனதிற்கு நெருக்கமான ஒன்று. இந்த ஒரே பாடலில் சரத்குமார் சக்திவேல் டிரான்ஸ்போர்ட், சக்திவேல் காட்டன் மில், சக்திவேல் கார்டன்ஸ் என எக்கச்சக்க தொழிலை தொடங்கி விடுவார்.

அது மட்டுமா அந்த பாட்டு முடிவதற்குள் தேவயானி படித்து கலெக்டரே ஆகிவிடுவார். இதெல்லாம் சினிமாவுக்கு சரி, நிஜ வாழ்க்கையில செட் ஆகுமா என்ற கேள்வி எல்லோருக்கும் இருக்கும். ஆனால் அதையும் சாதித்து காட்டுவேன்னு இப்போ சரத்குமார் சமீபத்தில் ஒரு சபதம் எடுத்திருக்கிறார்.

சரத்குமார் சமத்துவ மக்கள் கட்சி தொடங்கிய போது அவருக்கு தென் தமிழகத்தில் நல்ல வரவேற்பு இருந்தது. இதற்கு அவர் நடித்த நாட்டாமை, சூரிய வம்சம் போன்ற படங்களும் ஒரு காரணம். அவர் சார்ந்திருந்த சமூகம் பெரிய அளவில் அவருக்கு வரவேற்பு கொடுத்தது.

அதன் பின்னர் அரசியலில் சரத்குமார் காணாமல் போய்விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் நிறைய கட்சிகள் ஆளும் பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கின்றன. ஆனால் நம்ம நாட்டாமை அவருடைய சமத்துவ மக்கள் கட்சியை அந்தக் கட்சியுடன் இணைத்து விட்டார்.

அதிலும் நைட் ரெண்டு மணிக்கு எழுந்து, என் மனைவி ராதிகா கிட்ட இத பத்தி பேசினேன் என சொல்லி இருந்தார். இதனால் நாட்டாமை பெரிய அளவில் ரோல் செய்யப்பட்டதும் நமக்கு தெரியும். மேடைப்பேச்சுனு வந்தாலே சரத்குமார் நெட்டிசன்களுக்கு பயங்கரமாக கண்டன்டு கொடுக்க ஆரம்பித்து விடுகிறார்.

நாட்டாமை எடுத்த சபதம்

தலைவர் எது பேசினாலும் காமெடியா தான் இருக்கும் என ஆகிவிட்டது. இதுல சமீபத்தில் நடந்த பிரச்சார விழாவில் சரத்குமார் கலந்து கொண்டார். அப்போது பொதுமக்களிடம் சூரிய வம்சம் படத்துல எப்படி தேவயானிய கலெக்டர் ஆக்கினேனோ, அதே மாதிரி என் பொண்டாட்டி ராதிகாவை இந்த எலக்சன்ல எம்பி ஆக்குவேன் என சொல்லி இருக்கிறார்.

அந்தப் படத்துல சின்ராசு பொண்டாட்டி எப்படி ஒரே பாட்டுல கலெக்டர் ஆனாங்கனே நமக்கு தெரியல. இதுல இன்னும் 30 நாள்ல நிஜப் பொண்டாட்டி ராதிகாவ எம் பி ஆக்குறேன்னு நாட்டாம சபதம் விட்டிருக்காரு. இருந்தாலும் தலைக்கு ரொம்ப தில்லு தான்.

Trending News