செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

பிரம்மாண்ட இயக்குனர்களின் முதல் சாய்ஸ் இந்த தமிழ் நடிகர் தான்.. ராஜமௌலியே வியந்து பார்த்த பிரபலம்

Rajamouli : பிரம்மாண்ட படங்களில் ஒரு நடிகர் தொடர்ந்து கமிட்டாகி வருகிறார். அதுவும் ஷங்கர் படத்தில் வாய்ப்பு கிடைப்பது மிகவும் கடினமான ஒன்றுதான். இப்போது கமலை வைத்து இந்தியன் 2 படத்தை இயக்கி வருகிறார்.

அதோடு இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 என இரண்டு பாகங்களாக இந்த ஆண்டு வெளியிட முடிவு செய்து இருக்கின்றனர். இது தவிர தெலுங்கில் ராம்சரணின் படத்தை இயக்கி வருகிறார்.

கேம் சேஞ்சர் என்று இந்த படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஷங்கரின் இந்த இரண்டு படங்களிலுமே அந்தப் பிரபலம் நடித்து வருகிறார்.

சமுத்திரகனியை பாராட்டிய ராஜமௌலி

அதாவது தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி இப்போது நடிகராக படு பிஸியாக இருக்கிறார் சமுத்திரக்கனி. இந்நிலையில் பிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படத்திலும் சமுத்திரகனி நடித்திருந்தார்.

இந்தப் படத்திற்காக சமுத்திரக்கனி தானே சொந்த பணத்தில் டிக்கெட் போட்டு வந்து நடித்துக் கொடுத்து சென்றுள்ளார். அவருடைய இந்த குணாதிசயம் மற்றும் நடிப்பு திறமையை ராஜமௌலி வியந்து பார்த்துள்ளார்.

இதனால் ராஜமௌலி தன்னுடைய அடுத்த படத்திலும் இவரை ஒப்பந்தம் செய்ய இருக்கிறாராம். இது தவிர தெலுங்கு சினிமாவில் பிளாக் பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்துள்ள திரிவிக்ரம் படத்திலும் சமுத்திரகனி நடிக்க உள்ளார்.

திரிவிக்ரம் அடுத்ததாக விஜய்யின் 69ஆவது படத்தை இயக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஒருவேளை அந்த படத்தில் கூட சமுத்திரக்கனி கமிட்டாகி இருக்கக்கூடும்.

Trending News