Mani Ratnam is doing something he has never done before in ThugLife: தமிழ் சினிமாவின் தலைசிறந்த இயக்குனரான மணிரத்தினம் புதுமையான மற்றும் சரித்திர கதைகளை தரமான விதத்தில் பகிர்ந்தளிக்கும் மாமேதை ஆவார்.
கிட்டத்தட்ட 38 ஆண்டுகளுக்கு முன் மணிரத்தினம் மற்றும் கமலஹாசன் இணைந்த “நாயகன்” இன்றும் சினிமா ஆர்வலர்கள் இடையே பேசும் பொருளாகவும்,
திரை உலக மாணவர்களுக்கு குறிப்பு எடுத்துக் கொள்ளும் பொக்கிஷமாகவும் உள்ளது.
மீண்டும் இதே கூட்டணி பல ஆண்டுகளுக்குப் பின் இணைந்துள்ளது என்பது பலரையும் எதிர்பார்க்க வைத்துள்ளது.
எப்போதுமே மணிரத்தினம் தனக்குரிய கொள்கையில் சமரசம் செய்யாது, தான் நினைப்பதை தனது படைப்பில் கொண்டு வருவதில் கில்லாடி.
ஆனால் இப்போது வந்திருக்கும் பான் இந்தியா மூவி கலாச்சாரத்தால் தனது கொள்கைகளை கைவிட்டு வணிக நோக்கத்திற்காக திரைப்படங்களில் பல சமரசங்களை செய்து வருகிறார்.
முதலாவதாக எப்போதுமே தனது படங்களுக்கு செந்தமிழில் தலைப்பு வைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்த மணிரத்தினம், கமலின் 234 வது படத்திற்கான தலைப்பை தக் லைஃப் என்றார்.
படத்தின் தலைப்பு தக் லைஃப் வைத்ததற்கான காரணம்
தக் லைஃப் என்றால் “இழப்பதற்கு எதுவும் இல்லாதவன் செய்யும் வாழ்வியல் போராட்டம்” என்றும், “பின் விளைவுகளை நினைத்து பாராமல் துணிவானவனின் தரமான சம்பவம்” என்றும் கூறுகின்றனர்.
இந்த தலைப்பு உலக நாயகனுக்கு பொருத்தமானது தான் என்றாலும், தமிழ் ஆர்வலர்கள் சிலரால் தலைப்பை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
மணிரத்தினமே பான் இந்தியா மூவிக்காக, ஆங்கிலத்தை நாடி உள்ளாரே என்று சாடுகின்றனர் தமிழ் ஆர்வலர்கள்.
எப்போதும் வலைதளங்களே வாழ்க்கை என வாழ்ந்து கொண்டிருக்கும் இளம் நெஞ்சங்களுக்கு இந்த தக் லைஃப் கொண்டாட்டம் தான்.
அதுமட்டுமின்றி இதில் நடிக்க கமலுடன், திரிஷா, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா லட்சுமி, துல்கர் சல்மான் என பல நடிகர்கள் ஒப்பந்தம் ஆகினர்.
பல்வேறு காரணங்களால் துல்கர் சல்மான் இதில் இருந்து விலகி விட, மாமனார் கமலின் வற்புறுத்தலின் பெயரில் படத்தின் முக்கிய காட்சியில் ஸ்மார்ட் வில்லனாக களம் இறங்குகிறார் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு.
இயக்கத்தை மட்டும் கையில் எடுத்துக்கொண்டு மற்ற பொறுப்புக்களை மாமனாரிடம் விட்டுவிட்டார் மணிரத்தினம். தக் லைஃப் படப்பிடிப்பு பாராளுமன்ற தேர்தலுக்குப் பின் சூடு பிடிக்க உள்ளது.