திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

இந்த வாரம் தியேட்டரில் வெளியாகும் 5 படங்கள்.. மஞ்சுமல் பாய்ஸுக்கு செக் வைக்கும் நடிப்பு அரக்கன்

This Week Theater Release: கடந்த வாரம் ஜிவி பிரகாஷின் ரெபல் மட்டும் தான் தியேட்டரில் வெளியானது. ஆனால் இந்த வாரம் ஐந்து படங்கள் திரையரங்குகளை ஆக்கிரமிக்க இருக்கிறது.

ஆடு ஜீவிதம்: பிரித்விராஜ், அமலா பால் நடிப்பில் பிளஸ்சி இயக்கியுள்ள ஆடு ஜீவிதம் வரும் 28ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. சமீபத்தில் வெளிவந்த இதன் ட்ரெய்லரே படு மிரட்டலாக இருந்தது.

சமீபகாலமாக வெளிவரும் மலையாள படங்கள் தமிழ்நாட்டில் ஸ்கோர் செய்து வருகிறது. அந்த வரிசையில் மஞ்சுமல் பாய்ஸுக்கு செக் வைக்கும் வகையில் இப்படம் வெளியாக இருக்கிறது.

ஹாட் ஸ்பாட்: விக்னேஷ் கார்த்திக் இயக்கி இருக்கும் இப்படத்தில் கலையரசன், ஆதித்யா பாஸ்கர், கௌரி கிஷன், சாண்டி மாஸ்டர், அம்மு அபிராமி என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

சமீபத்தில் இதன் டீசர் வெளியாகி ஒரு சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. அதனாலேயே பெரிதும் எதிர்பார்க்கப்படும் இப்படம் வரும் 29ஆம் தேதி வெளியாக உள்ளது.

நேற்று இந்த நேரம்: பிக்பாஸ் பிரபலமான ஷாரிக் ஹீரோவாக இப்படத்தில் நடித்துள்ளார். திகில் மர்மம் கலந்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை சாய் ரோஷன் இயக்கியுள்ளார். வரும் 29ஆம் தேதி படம் வெளியாகிறது.

வெப்பம் குளிர் மழை: பாஸ்கல் வேதமுத்து இயக்கியுள்ள இப்படத்தில் திரவ், எம் எஸ் பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். குழந்தையின்மை பற்றி பேசும் படம் மார்ச் 29ஆம் தேதி வெளியாகிறது.

தில்லு ஸ்கொயர்: தெலுங்கு படமான இதில் சித்து, அனுபமா பரமேஸ்வரன் இணைந்து நடித்துள்ளனர். மல்லிக் ராம் இயக்கியுள்ள இப்படத்தின் ட்ரெய்லரே சர்ச்சையை கிளப்பியது.

அதிலும் அனுபமா இதுவரை இல்லாத அளவுக்கு கிளாமரில் நடித்துள்ளார். அந்த வகையில் ஏ சர்டிபிகேட் கிடைத்துள்ள இப்படம் வரும் 29ஆம் தேதி தெலுங்கில் ரிலீஸ் ஆகிறது.

இப்படியாக இந்த ஐந்து படங்களும் இந்த வாரம் வெளியாக இருக்கிறது. இதில் ஆடு ஜீவிதம் மிகப்பெரும் வசூல் வேட்டை நடத்தும் என கணிக்கப்பட்டுள்ளது.

Trending News