வியாழக்கிழமை, ஜனவரி 2, 2025

ஒரு வழியா குடும்பத்திற்கு டாட்டா போட்ட அன்னபூரணி.. சசிகுமாருடன் மாஸாக சம்பவம் செய்ய காத்திருக்கும் நயன்தாரா

Nayanthara is waiting to have a mass incident with Sasikumar: தமிழ் சினிமாவில்  முன்னணி நடிகையான லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்த சில மாதங்களாக குடும்பம் குட்டி என்று பிசியாக உள்ளார். 

அனைத்து துறையிலும் சாதிக்கும் பெண்களுக்கு குடும்பம் என்பது ஏதோ ஒரு வகையில் தவிர்க்க முடியாத முட்டுக்கட்டை ஆகி விடுகிறது. சாதிப்பதை விட குழந்தைகளுக்காகவே வாழ தூண்டுகிறது.

கடந்தாண்டு  நயன்தாரா நடிப்பில் வெளியான இறைவன், அன்னபூரணி போன்ற திரைப்படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பலத்த அடி வாங்கியது. இதனால் அவரது கேரியரும் சற்றே சரிந்து வந்தது.

இருந்த போதும் தனது சம்பளத்தை குறைத்துக் கொள்ளாது, தமிழ் சினிமாவின் டாப் ஒன் நடிகையாக கெத்தாக வலம் வந்தார் அன்னபூரணி.  

நடிப்புக்கு சிறிது ஓய்வு விட்டு விக்னேஷ் சிவனின் காதல் மழையில் உருகி சர்ச்சையான பதிவுகள் மற்றும் புகைப்படங்கள் ஆகியவற்றை வலைதளங்களில் பதிவிட்டு எப்போதுமே ட்ரெண்டிங்கில் இருந்து வந்தார். 

குழந்தைகளை பிரிய மனமில்லாமல் நயன்தாரா இரண்டு வருடங்களாக எந்த ஒரு வெளிப்புற படப்பிடிப்புக்கும் போகவில்லை, இப்பொழுது வரிசையாக கைவசம் நிறைய படங்கள் வைத்துள்ளார்.

விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் எல்ஐசியில் பிரதீப் ரங்கநாதனின் அக்காவாக நடிக்க உள்ளார்.

அது மட்டும் இன்றி தனி ஒருவன் 2,  மண்ணாங்கட்டி சின்ஸ் 1960 போன்ற படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளார்.

குடும்பத்துடன் ஒன்றிணைந்ததால் கேரியரில் சரியாக கவனம் செலுத்த முடியவில்லை என்று முடிவு எடுத்த நயன்தாரா,

தற்போது குடும்பம் மற்றும்  குழந்தைகள் மீதான பொறுப்பை கணவரிடம் மாட்டிவிட்டு, திரையில் கவனம் செலுத்த உள்ளார். 

தற்போது இவர் கமிட்டாகி இருக்கும் படங்களில் அவுட்டோர் ஷூட்டிங் என்றாலும் உடனே ஓகே சொல்லி விடுகிறாராம்.

சசிகுமார் இயக்கத்தில் நயன்தாரா

அதுமட்டுமின்றி பல வருடங்கள் கழித்து இயக்குனராக கம்பேக் கொடுக்கும் சசிகுமாரின் இயக்கத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் தோன்ற உள்ளாராம் நயன்தாரா.  

பெண்களை மையமாக வைத்து புரட்சி ஏற்படுத்தும் வகையில் அமைய உள்ளதாம் இத் திரைப்படம். ஆனால் இது பற்றி இன்னும் எந்த ஒரு அறிவிப்பும் அதிகாரப்பூர்வமாக வெளியிடாமல் ரகசியமாய் வைத்துள்ளனர்.

Trending News