லோக்சபா தேர்தல் GOAT தயாரிப்பாளருக்கு வைக்கும் கண்ணிவெடி! விஜய்யின் ஓட்டுக்கு செலவு செய்யும் ஏஜிஎஸ்

AGS will spend on Vijay’s vote in Loksabha election: கடந்த ஆண்டு வெளியான லியோ படத்தின் வெற்றிக்குப் பின் தளபதி விஜய் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் GOAT திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.

இரு வேடங்களில் நடிக்கும் விஜய் உடன் பிரபுதேவா, பிரசாந்த், மீனாட்சி சவுத்ரி லைலா, சினேகா என பல முன்னணி நட்சத்திரங்களும் இணைந்துள்ளனர்.

வழக்கமான கதையாக இல்லாமல் சயின்ஸ் பிக்சன் ஆக்சன் டிராமாவாக உருவாகி வரும் இத்திரைப்படம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

கிளைமாக்ஸ் காட்சிக்காக இலங்கை செல்ல இருந்த பட குழு திடீரென திட்டத்தை மாற்றி திருவனந்தபுரத்தில் சூட்டிங் வைத்தது.

காவலன் படத்திற்கு பின் பல ஆண்டுகள் கழித்து கேரளாவில் விஜய்யின் படப்பிடிப்பு என்பதால் கேரளா ரசிகர்கள் உற்சாகமுடன் வரவேற்பு அளிக்கின்றனர். 

படப்பிடிப்பு முடித்தவுடன் கேரளா ரசிகர்களுடன் செல்பி எடுப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார் தளபதி.

கோட் படசூட்டிங்கின் அடுத்த ஷெட்யூல் ரஷ்யாவில் நடக்க உள்ளது. முக்கியமான காட்சி என்பதால், தயாரிப்பு தரப்பில் அதிக செலவு செய்ய உள்ளார்களாம்.

ரஷ்யாவில் நடக்கும் ஷூட்டிங்கிக்கு விஜய் போகும் பட்சத்தில், வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் அவரது ஓட்டு என்பது கேள்விக்குறியாக உள்ளது.

இந்திய ஜனநாயகத்தில் ஒரு ஓட்டோட மதிப்பு என்பது சர்க்காரில் நடித்த விஜய்க்கு தெரியாமல் இருக்குமா?

குடிமகனின் கடமையாற்ற காத்திருக்கும் விஜய் 

விஜய் ஷூட்டிங்கில் கலந்து கொள்வதற்காக ரஷ்யா சென்றால் எலக்சனுக்கு வர முடியாது. சூட்டிங்கில் கலந்து கொள்ளாமல் ஓட்டு போட  இங்கே வந்தார் என்றால் ப்ரொடியூசருக்கு பெரிய நஷ்டம் ஆகும். படத்தின் ரிலீசும் தள்ளி போக வாய்ப்பு உள்ளது.

கூட்டி கழிச்சு எப்படி பார்த்தாலும் தயாரிப்பாளருக்கு நஷ்டம் நஷ்டம் தான். நடிகனாக இருந்து ஓட்டு போடவில்லை என்றாலே கிழித்து தொங்க விட்டு விடுவார்கள் இந்த  மீடியாக்கள். இதில் அரசியல் கட்சி தலைவர் வேற! விட்டு வைப்பார்களா..?

விஜய் ரஷ்யாவில் இருந்து ஓட்டுபோடுவதற்காக இந்தியா வந்து செல்லவும், அதுவரை ரஷ்யாவில் தாமதிக்கும் படப்பிடிப்புக்கு  தண்டமாகும் மொத்த செலவும் தயாரிப்பு நிறுவனம் தான் ஏற்க வேண்டியது இருக்கும். என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →