சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

ஆடுகளை வாக்கிங் கூட்டிட்டு போன பிருத்விராஜ்.. ஆடு ஜீவிதத்தையும் விட்டு வைக்காத ப்ளூ சட்டை

Prithviraj : நேற்றைய தினம் மலையாள சினிமாவில் வெளியான ஆடு ஜீவிதம் படத்திற்கு நல்ல வரவேற்பது கிடைத்து வருகிறது. பிருத்விராஜ் மற்றும் அமலா பால் இருவரும் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இந்நிலையில் சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது யூடியூப் சேனலில் படங்களை விமர்சித்து வருவார். அந்த வகையில் ஆடு ஜீவிதம் படத்தை பற்றி பேசி இருக்கிறார். அதாவது இந்த படத்தின் கதை சவுதி அரேபியா போன்ற வளைகுடாவில் நடக்கும் கதை.

அங்கு அவர்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை என்றாலும் ராஜஸ்தான் போன்ற இடங்களில் படமாக ஜார்டான் ஆகிய இடங்களுக்கு சென்று படப்பிடிப்பு நடத்தி இருக்கின்றனர். அதிலும் படத்திற்கான கதாபாத்திரங்களை சரியாக தேர்ந்தெடுத்துள்ளனர்.

அடி ஜீவிதம் படத்தில் மைனஸ்

படத்தில் மைனஸ் என்றால் நான் லீனியராக இல்லாமல் லீனியர் படமாக எடுத்திருந்தால் நன்றாக இருக்கும். ஆரம்பத்தில் பிருத்விராஜ் படும் கஷ்டங்களை காட்டி விட்டு அதன் பிறகு பிளாஷ்பேக் காட்சிகளை அவர் நன்றாக இருந்த நினைவுகள் காட்டப்படுகிறது. அதேபோல் பிருத்விராஜ் படும் கஷ்டம் ரசிகர்களுடன் கனெக்ட் செய்யவில்லை.

இந்த விஷயத்தை செய்ய இயக்குனர் தவறிவிட்டார். மேலும் பாலைவனமாக இருக்கும் இடத்தில் பிருத்விராஜ் ஆடுகளை அழைத்து செல்கிறார். எந்த தாவரமும் மற்றும் தண்ணீர் இல்லாத இடத்தில் வாக்கிங்க்கா பிரித்விராஜ் ஆடுகளை அழைத்துச் செல்கிறார் என கிண்டலடித்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

மேலும் பிருத்விராஜின் நடிப்புக்கு கட்டாயம் ஆஸ்கர் கொடுக்கலாம். இந்தப் படத்தை ஒரு முறை தியேட்டரில் சென்று பார்க்கலாம். சர்வைவர் படம் கண்டிப்பாக பாருங்கள் என பலர் கூறினார்கள். ஆனால் இங்கு தமிழ் படங்களை பார்ப்பதே மிகப்பெரிய சர்வைவல் தான் என்று ப்ளூ சட்டை மாறன் கலாய்த்திருக்கிறார்.

Trending News