வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

நயன்தாரா கூட நடித்த பிறகு சினிமாவுக்கு முழுக்கு போட்ட க்யூட் நடிகை.. பொறாமையில் பொங்கிய லேடி சூப்பர் ஸ்டார்

Actress Nayanthara: சினிமாவை பொறுத்த வரைக்கும் நன்றாக நடிக்க தெரிந்தவர்கள் ஜெயித்தார்களா என்று கேட்டால் அதற்கு பதில் பாதிக்கு பாதி தான். எந்த அளவுக்கு திறமை இருக்கிறதோ அதை வைத்துத்தான் சினிமாவில் நீடித்து நிற்க முடியும்.

திறமை என்பதை தாண்டி வாயுள்ள பிள்ளை தான் பிழைக்கும் என்பது போல், தனக்கு என்ன தேவை என்பதை தானே செய்து கொண்டால் தான் வெற்றி. அப்படி முதலில் சினிமாவுக்கு வரும் பொழுது ஒன்னும் தெரியாத பாப்பா போல் வந்திருந்தாலும், சினிமாவுக்கு தேவையான அத்தனை அரசியலையும் கரைத்துக் குடித்தவர் தான் நயன்தாரா.

குண்டாக இருந்த தன்னுடைய தோற்றத்தை மாற்றியதால் தான் அவருக்கு வெற்றி என்று நினைத்தால் அதில் தான் பெரிய தவறு. யாரிடம் எப்படி பேச வேண்டும், எப்படி வாய்ப்பு வாங்க வேண்டும் என்பதே நேக்காக புரிந்து கொண்டு காய் நகர்த்தியதால் தான் இந்த வெற்றி.

ஒரு சில நடிகைகளை போல் நயன்தாரா தன்னை வருத்திக் கொண்டு ஏதாவது ஒரு படத்தில் நடித்தாரா என்று கேட்டால் சத்தியமா அப்படி ஒன்னு நடந்ததே கிடையாது. அவருடைய உச்சபட்ச நடிப்பு, ராஜா ராணி படத்தில் காருக்குள் அழும் சீன் தான்.

நயன்தாரா எப்போதுமே தன்னுடைய படத்தில் தனக்கு தங்கையாக தோழியாக நடிக்கும் பெண்கள் தன்னைவிட எடுப்பாக தெரிய கூடாது என்பதில் ரொம்ப உஷாராக இருப்பார். அந்த கேரக்டரில் எல்லாம் யார் என் நடிக்கிறார்கள் என்று தெரிந்த பிறகுதான் படத்திற்கே ஓகே சொல்வார்.

அப்படிப்பட்ட நயன்தாரா பெரும்பாலும் டபுள் ஹீரோயின் சப்ஜெக்ட்டை ஒத்து கொள்வது கிடையாது. ஒரு முறை தன்னுடைய காதல் கணவர் இயக்கிய காத்து வாக்குல ரெண்டு காதல் படம். அதற்கு முன்னால் ராஜா ராணி படத்தில் நஸ்ரியா உடன் இணைந்து நடித்தார்.

நஸ்ரியா தன்னைவிட திரையில் மாட்டாக தெரிவார் என்று தெரிந்திருந்தும் நயன்தாரா அதற்கு ஓகே சொல்ல காரணம் அப்போது நயன்தாராவுக்கு மார்க்கெட் இல்லாமல் இருந்தது தான். அந்த பட சமயத்தில் நயன்தாராவை விட, நஸ்ரியாவுக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்.

பொறாமையில் பொங்கிய லேடி சூப்பர் ஸ்டார்

அது மட்டும் இல்லாமல் படபிடிப்பு தளத்தில் நஸ்ரியாவை டார்லிங் என்றுதான் அட்லி கூப்பிடுவாராம். ஒருமுறை நயன்தாராவே டென்ஷன் ஆகி என்னையே அப்படி செல்ல பேர் வச்சு கூப்பிட மாட்டாங்க, என்னையும் அப்படி கூப்பிடுங்க என்று சொல்லி எல்லாம் சண்டை போட்டு இருக்கிறாராம்.

இது போதாது என்று அவருடைய நட்பு நாயகன் தனுசுடன் இணைந்து நஸ்ரியா நையாண்டி படத்தில் நடித்திருந்தார். அந்தப் படத்தில் அவருக்கு நடிக்கவே தெரியவில்லை என ரொம்ப வும் மட்டமாக பேசி இருக்கிறார்.

ஏற்கனவே நையாண்டி படகுழு உடன் நஸ்ரியாவுக்கு தகராறு ஏற்பட்டது. இப்படிப்பட்ட சினிமாவில் தன்னுடைய இயல்பை மாற்றிக்கொண்டு நடிக்க நஸ்ரியாவுக்கு விருப்பமில்லை. அதே நேரத்தில் தன்னுடைய சிறந்த வாழ்க்கைத் துணையை அவர் தேடிக் கொண்டார். புலிகள் வாழும் காட்டில் மான் குட்டிக்கு இடமில்லை என்பது போல், இனி சினிமாவே வேண்டாம் என்றும் ஒதுங்கிக் கொண்டார்.

 

 

 

 

Trending News