ஏப்ரல் மாதத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் 6 படங்கள்.. ரத்னமாக ஜொலிக்க வரும் விஷால்

Actor Vishal : கடந்த மாதம் மலையாளத்தில் வெளியான படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெற்றிருந்தது. ஆனால் இந்த ஏப்ரல் மாதம் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஆறு படங்கள் திரைக்கு வர இருக்கிறது.

மாஸ் காட்டும் ஜிவி பிரகாஷ்

கடந்த மாதம் ஜிவி பிரகாஷின் ரெபல் படம் வெளியாகி இருந்தது. இந்தப் படத்திற்கு ஓரளவு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் ஏப்ரல் மாதம் இரண்டு படங்கள் ஜிவி பிரகாஷ் கைவசம் இருக்கிறது.

பிவி சங்கர் இயக்கத்தில் ஜிவி பிரகாஷின் மற்றும் பாரதிராஜா, இவானா ஆகியோர் நடிப்பில் கள்வன் படம் உருவாகி இருக்கிறது. இப்படம் ஏப்ரல் நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

அதேபோல் ஜிவி பிரகாஷ் மற்றொரு படமான டியர் படம் ஏப்ரல் 11 வெளியாகிறது. இந்த படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் முதல் முறையாக நடித்திருக்கிறார்.

விஜய் ஆண்டனியின் ரோமியோ

விநாயகர் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி மற்றும் மிருணாளினி ரவி ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் ரோமியோ படம் ஏப்ரல் 11 வெளியாகிறது.

படத்தின் போஸ்டரில் விஜய் ஆண்டனி கையில் பாலும் ஹீரோயின் கையில் பீரும் என வித்தியாசமாக வெளியாகி இருந்தது. ஆகையால் படம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

சுந்தர் சியின் அரண்மனை 4

சுந்தர் சி யின் அரண்மனை 4 படமும் ஏப்ரல் மாதம் தான் வெளியாகிறது. இதில் தமன்னா, ராசி கண்ணா, சுந்தர் சி போன்ற எக்கச்சக்க பிரபலங்கள் நடித்திருக்கின்றனர். இப்படம் ஏப்ரல் 11 அல்லது 26 வெளியாக இருக்கிறது.

சம்பவம் செய்யும் சந்தானம்

சந்தானம் ஹீரோவாக நடித்து வெளியாகும் படங்கள் இப்போது நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் ஏப்ரல் 26 ஆம் தேதி இங்க நான் தான் கிங் என்ற படம் வெளியாகிறது.

ரத்னமாக ஜொலிக்க வரும் விஷால்

ஹரி இயக்கத்தில் விஷால் மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகி இருக்கிறது ரத்னம். இந்தப் படம் வருகின்ற ஏப்ரல் 26 வெளியாக உள்ள நிலையில் விஷால் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Leave a Comment